பைக்கில் பின் தொடர்ந்த ரசிகர்கள் - காரில் இருந்து எட்டிப்பார்த்து ராஷ்மிகா சொன்ன விஷயம்.

By Manikandan · 27/12/2022

வாரிசு பட நடிகையான ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் மீது கோவப்பட்டு பேசிய வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எல்லா நடிகர்களும் சினிமாத்துறைக்கு வந்த சிறிதுகாலத்தில் பிரபலமாக ஆவதில்லை. ஆனால் புஷ்பா படத்திற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சினிமாத்துறையில் இந்தியா வருபவர் ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் தெலுங்கு கன்னடம் என கலக்கி வந்த ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவிலும் இப்போது கலக்கி வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான "புஷ்பா" திரைப்படம் பெரியா அளவில் ஹிட் அடிக்கவே அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். கன்னட சினிமாவில் "கீதா கோவிந்தம்" படத்தின் "இங்கேம் இன்கேம்" என்ற தெலுங்கு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. நடிகை ராஷ்மிகா குறைவான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சோசியல் மீடியா பக்கங்களில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக முன்னிலையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து "வாரிசு" படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் "வாரிசு" படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள்அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சரத்குமார் போன்ற பல நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

https://twitter.com/PeaceBrwVJ/status/1607076239868825601

இப்படி பட்ட நிலையில் தற்போது ராஷ்மிகா ரசிங்கர்களை திட்டும் வீடியோ சமூக வலைதளங்கில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் காரில் சென்று கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனாவை காண சில இளைஞர்கள் மிகவும் ஆபத்தான முறையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ரைட் செய்து இவரை காண வந்தவர்களை பார்த்தவுடன் ஹெல்மெட் அணிய சொன்னார் மேலும் அதனை உடனடியாக செய்யுங்கள் என்று கூறினார் ரஷ்மிகா மந்தனா.

https://twitter.com/Redrayer45/status/1607099671369113601

இந்த வீடியோ ஷோசியல் மீடியாவில் வைரலாகவே பலரும் ரஷ்மிகா செய்த இந்த செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் காந்தாரா படத்திற்கு கூறிய கருத்து விவகாரத்தில் விமர்சனத்திகுள்ளான ராஷ்மிகா தற்போது அவரை காண வந்த ரசிகர்களுக்கு ஹெல்மெட் அணியுங்கள் என்று அறிவுறை கூறிய வீடியோ ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு லைக்குகளை பெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full