NationalCrush Rashmika - தனது பெருமையை கூறிய ராஷ்மிகா. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

By Rajkumar · 24/11/2020

இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.

https://twitter.com/Chandan69314853/status/1330715969111527424

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது. அதிலும், நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று டைப் செய்தால், நடிகை ராஷ்மிகா பெயர் இடம்பெறுகிறது. அவர் பிரபலமான ஹீரோயின்களை முந்தி, இந்த இடத்தைப் பிடித்துள்ளார். அந்த ஹேஷ்டேக்கை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

https://twitter.com/Rockybaai/status/1330690556603711494

அந்த டீவீட்டில், இந்த ரசிகர்கள் உண்மையிலேயே சிறப்பானவர்கள். புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் அன்பு என்று கூறியுள்ளார். இந்த நிலையில், இந்த ட்வீட் ரசிகர்கள் சில பேர் ரஷ்மிக்காவை கிண்டல் செய்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் 'எப்படா ட்ரெண்ட் பண்ணுவான்க எப்படா டுவிட் போடலாம்னு ஒக்காந்துருக்கும் போல' என்றெல்லாம் இவரை ட்ரோல்ல செய்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full