எல்லோரிடமும் சாம்பல் நிறம் இருக்கு, யாரும் உங்கள படம் பார்க்க கட்டாயப்படுத்தல - ராஷ்மிகா மந்தனா ஆதங்கம்

By subhashini · 2/7/2025

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் 2016 என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் குபேரா படத்தில் ராஷ்மிகா நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நாகர்ஜுனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தனுஷின் நடிப்பும் இயக்குனர் உடைய வேலைப்பாட்டையும் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ராஷ்மிகா குறித்த தகவல்:

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து ராஷ்மிகா பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அனிமல் படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா கூறியது, நான் படத்தை படமாக மட்டும் தான் பார்ப்பேன். ஒரு ஹீரோ படத்தில் சிகரெட் பிடிக்கிறார் என்றால் அவர் படம் பார்ப்பவர்களையும் பிடிக்க சொல்கிறார் என்று சொல்வார்கள்.

ராஷ்மிகா பேட்டி:

இன்றைய காலகட்டத்தில் சிகரெட் பிடிப்பது, குடிப்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது. எந்த வகையிலும் பாதிக்கப்படுவதற்காக ஒரு படத்தை பார்க்க போவது கிடையாது. தனிப்பட்ட முறையில் நான் ஒருபோதும்
புகைபிடிக்க மாட்டேன். படத்திற்கு தேவை என்றால் செய்துதான் ஆக வேண்டும். ஒருவேளை நீங்கள் படத்தை பார்த்து உங்களுடைய குணங்கள் மாற்றப்படுகிறது என்றால் அந்த ஏற்ற மாதிரி படங்களை நீங்கள் பாருங்கள். யாரும் யாரையும் படம் பார்க்க வற்புறுத்துவதில்லை.

விமர்சனங்களுக்கு பதிலடி:

அப்படி வற்புறுத்தி படம் பார்க்க வைத்திருந்தால் ஒவ்வொரு படமும் பிளாக்பஸ்டர் ஆக மாறி இருக்கும். நம்முடைய ஒவ்வொருக்குள்ளும் சாம்பல் நிற கதாபாத்திரங்கள் இருக்கிறது. நாம் எப்போதுமே கருப்பு அல்லது வெள்ளை கிடையாது. நம் அனைவருக்கும் சாம்பல் நிறம் இருக்கிறது. மேலும், சந்தீப் ரெட்டி ஒரு குழப்பமான கதாபாத்திரத்தை பற்றி படத்தில் பேசினார். அவ்வளவுதான் தவிர அதில் வேறு எந்த மாதிரியான விமர்சனமும் கிடையாது.

அனிமல் படம்:

உண்மையிலேயே ஒரு படத்தை அது என்னவென்று பார்க்க வேண்டும். அந்த கதாபாத்திரங்களில் நடித்ததை வைத்து ஒரு நடிகரை மதிப்பிட கூடாது. நடிகர்கள் திரையில் நடிக்கிறார்கள். அவ்வளவுதான் அது தான் அவர்களுடைய உண்மையான முகம் கிடையாது என்று கூறியிருக்கிறார். ஹிந்தியில் ராஷ்மிகா நடித்த அனிமல் படம் மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இந்த படத்தில் ரன்பீர் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full