நடிகர்களை அதிக நேரம் வேலை வாங்க வேண்டாம் - நடிகை ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குபேரா. இந்த படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதோடு இவர் சிக்கந்தர், தம்மா போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை அடுத்து தற்போது ராஷ்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தி கேர்ள்ஃப்ரண்ட்'. இந்த படம் நவம்பர் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் ராஷ்மிகா பிஸியாக இருக்கிறார்.
தி கேர்ள்ஃப்ரண்ட் படம்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் ராஷ்மிகா, நான் அதிகமாக வேலை செய்வேன். ஒரு சாதாரண மனிதன் செய்வதை விட அதிகமாக நான் வேலைகளை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு விஷயத்தை செய்ய முடியாது என்று நான் என் குழுவிடம் சொல்ல மாட்டேன். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்ளும்போது குறைந்த நேரத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக படபிடிப்பை முடித்துக் கொடுப்பேன். இருந்தாலுமே நடிகர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க வேண்டாம் என்றுதான் நான் சொல்வேன்.
ராஷ்மிகா பேட்டி:
மேலும், நடிகர்கள் மட்டும் இல்லாமல் இயக்குனர்கள், லைட் மேன்கள், இசையமைப்பார்கள் என்னை எல்லோருமே காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எங்களுக்கு ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். எங்களுக்கு குடும்பம் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். தூங்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். இளம் வயதில் ஆரோக்கியமாக கூட ஹிட் ஆகும் இருந்திருக்கலாமே என்று பின்னாடி வருத்தப்படக்கூடாது. அதேபோல் எனக்கு குழந்தைகள் இருந்தால் ரொம்ப பிடிக்கும்.
https://www.youtube.com/watch?v=XBJEJ5Jy6XE
வாழ்க்கை பற்றி சொன்னது:
நான் இன்னும் அம்மாகவில்லை. எதிர்காலத்தில் நான் அம்மாவானால் குழந்தைகள் மீது ரொம்ப அன்பு காட்டுவேன்.
கண்டிப்பாக நான் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பேன். பிறக்காத இந்த குழந்தைகளுக்காக நான் பல விஷயங்களை யோசிக்கிறேன். நான் அவர்களுக்கு அனைத்தையும் செய்ய விரும்புகிறேன். நான் அவர்களை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். போருக்கு செல்ல வேண்டிய சூழல் வந்தாலும் அவர்களுக்காக நான் செல்லுவேன் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.