ஒருவழியாக திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா - என்ன சொல்லி இருக்காரு பாருங்க

By subhashini · 21/1/2026

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த குபேரா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதன் பின் பாலிவுட்டில் வெளிவந்த தம்மா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் மைசா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா குறித்த தகவல்:

இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களிலும் நடிக்கிறார். அந்த வகையில் கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருந்த படம் கேர்ள்பிரண்ட். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கி இருந்தார். ஆண் சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணினுடைய போராட்டத்தை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களாகவே ராஷ்மிகா மந்தனாவின் திருமண குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா பேட்டி:

அதோடு விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா இருவரும் சில வருடங்களாக காதலிப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் கூறப்பட்டது. ராஷ்மிகாவின் கையில் நிச்சயதார்த்தம் மோதிரம் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், இவர்களுடைய திருமணம் ராஜஸ்தானில்
நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக ராஷ்மிகா- விஜய் தேவர் கொண்டா இருவருமே எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறார்கள்.

திருமணம் பற்றி சொன்னது:

சோசியல் மீடியாவில் ராஷ்மிகாவின் திருமணம் ஒரு பெரிய விவாத பொருளாகவே மாறி இருக்கிறது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் ராஷ்மிகாவிடம் ஒரு தொகுப்பாளர், விஜய் தேவர்கொண்டாவை நீங்கள் திருமணம் செய்து கொள்வது உண்மையா? இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஷ்மிகா, உண்மை என்னவென்றால் நான்கு வருடங்களாக இதுபோன்ற வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், எப்போது பேச வேண்டுமோ அப்போது நான் பேசுவேன் என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full