அதெல்லாம் பாலிவுட்ல தான் சூப்பர், தென்னிந்திய படங்கள்ல எல்லாம் இதான் இருக்கும் - ராஷ்மிகா பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.

By Arun · 29/12/2022

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி படக்குழுவினருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த "காந்தாரா" திரைப்படம் பற்றி தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய கருத்துகளினால் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்ட இவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பாடல் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா.

https://twitter.com/AndhraBoxOffice/status/1608138787334533121

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்கவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கண்டனம் என நடித்த வந்த இவர் சமீபத்தில் அமிதா பச்சன் நடித்த "குட் பாய்" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னி நடிகரான விஜய்யுடன் "வாரிசு" படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் நடந்த வாரிசு இசை வெளியிட்டு விழாவிலும் கலந்து கொண்டிருந்தார். வாரிசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சனுடன் இணைந்து மிஷன் மஜ்னு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தில் ஆடியோ வெளியிட்டு விழாவில் சர்ச்சையாக சில கருத்துகளை கூறியுள்ளார்.

https://twitter.com/imactorprabhas1/status/1608303607727652864

அதவது மஜ்னு படத்தில் இசைவெளியிட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா மந்தனா `தென்னிந்திய சினிமாவில் தனக்கு ஐட்டம் பாடல்களும், மசாலா பாடல்கள் மாடும் தான் வருவதாகவும் ஆனால் பாலிவுட்டில் இனிமையான ரொமான்டிக் வருவதாக கூறியுள்ளார். மேலும் தான் இப்போது நடித்திருக்கும் இந்த மஜ்னு படத்தில் அதே போல ஒரு இனிமையான ரொமான்டிக் பாடலில் நடித்திருப்பதாகவும் கண்டிப்பாக நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இப்படி பாலிவுட் சினிமாவில் வாய்ப்புக்காக தென்னிந்திய சினிமாவை தரம் தாழ்த்தி கூறியது பெரும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. மேலும் இவர் இடத்திற்கு தகுந்தாற்ப் போல மாறி மாறி பேசுவதாகவும், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் தான் எங்கிருந்து வந்தோம் என்று மறந்து பிரபலத்திற்கு ஆசைபட்டு ராஷ்மிகா மந்தனா இப்படி சொல்வதாகவும் இந்த விஷயம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

ஆனால் ராஷ்மிகா மந்தனா தொடக்கத்தில் நடித்திருந்த திரைப்படங்களில் நல்ல பாடல்களில் நடித்துள்ளதாகவும், அதனை நினைவில் கொல்லாமல் இப்படி பேசியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வை போல சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஷ்மிகாவிடம் "காந்தாரா" படத்தை பற்றி கூறியிருந்த கருத்து வைரலாகி ரசிகர்கள் அனைவரும் இவரை கடுமையாக திட்டி தீர்த்து வந்த நிலையில் இந்த புதிய பிரச்சனை எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full