கல்யாண சர்ச்சைக்கு மத்தியில் நடிகை ராஷ்மிகா மந்தனா போட்ட உருக்கமான பதிவு
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த குபேரா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதன் பின் பாலிவுட்டில் வெளிவந்த தம்மா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் மைசா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களிலும் நடிக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா குறித்த தகவல்:
அந்த வகையில் கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருந்த படம் கேர்ள்பிரண்ட். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கி இருக்கிறார். ஆணாதிக்க சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணினுடைய போராட்டத்தை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில மாதங்களாகவே ராஷ்மிகா மந்தனாவின் திருமண குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா பதிவு:
நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ராஷ்மிகா எந்த ஒரு விளக்கமும், உறுதியும் சொல்லவில்லை. இந்த நிலையில் தன்னுடைய சினிமா பயணம் 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ராஷ்மிகா மந்தனாவின் உருக்கமான பதிவில், நான் இங்கு உயிரோடு இருப்பதற்கு காரணம் ரசிகர்கள் நீங்கள் தான். உங்கள் அன்பு, வாழ்த்து, ஆதரவு இல்லாமல் இது சாத்தியம் கிடையாது. ஆரம்பம் முதல் மகள் சகோதரி தோழியாக நேசித்தீர்கள்.
சினிமா பயணம்:
அந்த அன்பே என்னை ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட வைத்தது. கிரிக் பார்ட்டி முதல் அனிமல் வரை
புகழை மேலும் அதிகரித்துள்ளது. திரை உலகில் பல விமர்சனங்கள், ட்ரோல்கள், சவால்களை எதிர்கொண்டாலும் ஒருபோதும் மனம் தளரவில்லை. ஒவ்வொரு ஏற்றத்தாழ்விலும் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். உங்கள் தன்னலமற்ற அன்புக்கு நான் எப்போதும் கடமைப்பட்டவள் என்று கூறி இருக்கிறார்.