நூலிலையில் விமான விபத்திலிருந்து தப்பிய National Crush ராஷ்மிகா. முழு விவரம் உள்ளே.

By Rajkumar · 18/2/2024

நூலிலையில் விமான விபத்திலிருந்து ராஷ்மிகா மந்தனா தப்பித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி தொழில் துறை குழுமத்தில் பிரபலமாக இயங்கி வருவது டாடா குழுமம். இதன் மூலம் விமான போக்குவரத்து சேவை நிறுவனமும் இயங்கி வருகிறது. இவர்கள் விஸ்டாரா என்ற பெயரில் விமான போக்குவரத்து சேவையை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஸ்டாராவிற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் மும்பையில் இருந்து ஹைதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது புறப்பட்ட 30 நிமிடத்திலேயே அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவருக்குமே பயம் ஏற்பட்டிருக்கிறது. பின் விமானி உடனடியாக அந்த விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ், சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி தரையிருக்கிறார்.

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா:

இந்த விமானத்தில் தான் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா பயணம் செய்தார். மேலும், இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா சோசியல் மீடியாவில், மரணத்திலிருந்து இப்படி தான் தப்பினோம் என்று புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நலம் விசாரித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த விமானத்தில் ராஷ்மிகாவுடன் நடிகர் ஷ்ரத்தா தாசும் பயணத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா மந்தனா குறித்த தகவல்:

மேலும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரியாகாததால் மாற்று விமானத்தில் பயணிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:

தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள்:

பின் தமிழில் இவர் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக படம் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full