Double Standard,காசுக்காக என்ன வேனா செய்வீர்களா ? ராஷ்மிகா விளம்பரத்தை கண்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

By Manikandan · 11/5/2023

காசுக்காக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் விளம்பரம் குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

View this post on Instagram

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

ராஷ்மிகா மந்தனா நடித்த படங்கள்:

சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் வாரிசு என்ற படத்தில் ராஸ்மிகா நடித்து இருக்கிறார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது. இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக படம் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா நடிக்கும் படங்கள்:

அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதோடு சமீபத்தில் ஹிந்தியில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் மிஷன் மஜ்னு. தற்போது இவர் ரன்பீர் கபருடன் அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி ராஷ்மிகா படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா நடித்த விளம்பரம்:

இந்த நிலையில் ராஷ்மிகா நடித்த விளம்பரம் குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ராஸ்மிகா நடித்த அகோடா என்ற விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதன் பின் மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் பிரைட் சிக்கன் பர்க்கரை அறிமுகம் செய்திருந்தது. இதனை விளம்பரம் படுத்தும் வகையில் நடிகை ராஸ்மிகாவை அணுகி இருந்தார்கள். ராஸ்மிகாவும் இந்த விளம்பரம் தொடர்பாக நடித்திருக்கிறார்.

விளம்பரம் சர்ச்சை:

தற்போது இந்த விளம்பர சர்ச்சையில் தான் ராஸ்மிகா சிக்கி இருக்கிறார். ஏன்னா, ராஸ்மிகா அளித்த பேட்டிகளில் நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் வழங்கிய பிரைடு சிக்கன் பர்கர் விளம்பரத்தில் எப்படிநடித்தார் ? ஏன் இப்படி இரட்டை வேஷம் போடுகிறார் ? காசுக்காக ராஸ்மிகா இப்படியெல்லாம் மாறிவிட்டாரா? காசுக்காக இப்படி வாய்க்கூசாமல் பொய் சொல்ல எப்படி முடிகிறது என்றெல்லாம் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full