முதலில் முருகதாஸ் சொன்ன கதை வேறு, ஷூட்டிங்கில் நடந்தது வேறு - நடிகை ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்

By subhashini · 21/1/2026

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த குபேரா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதன் பின் பாலிவுட்டில் வெளிவந்த தம்மா படத்தில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் மைசா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களிலும் நடிக்கிறார்.

ராஷ்மிகா குறித்த தகவல்:

அந்த வகையில் கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருந்த படம் கேர்ள்பிரண்ட். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கி இருந்தார். ஆணாதிக்க சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணினுடைய போராட்டத்தை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றறது. இதை அடுத்து ராஷ்மிகா படங்களில் பிசியாக பயணித்து வருகிறார். இந்த நிலையில் சிக்கந்தர் படம் தோல்வி தொடர்பாக ராஷ்மிகா சொன்ன விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா பேட்டி:

பாலிவுட்டில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியிருந்த சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.
இந்த படத்தில் சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஆனால், சிக்கந்தர் படம் பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தோல்வியை தழுவியது என்று கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் ராஷ்மிகா, சிக்கந்தர் படம் பற்றி முருகதாஸ் சார் உடன் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

சிக்கந்தர் தோல்வி:

கதை சொன்ன பிறகு நடந்தது எல்லாமே வேறுபட்டதாக இருந்தது. நான் முதலில் ஸ்கிரிப்ட்டை கேட்டபோது அது ரொம்ப வித்தியாசமானதாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. பொதுவாகவே சினிமாவில் இதுபோன்று நடப்பது வழக்கம் தான். ஒரு கதையை நாம் கேட்கும் போது அது ஒரு வடிவில் இருக்கும். ஆனால் படப்பிடிப்பின் போது நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங், வெளியீட்டு நேரம் என பல்வேறு காரணங்களால் கதை கதையில் மாற்றங்கள் ஏற்படும். இது சாதாரணமான விஷயம் தான். சிக்கந்தர் படத்திலும் இதே நிலைமைதான் நடந்தது என்று கூறியிருக்கிறார்

behindtalkies AMP · Quick view
View full