எல்லாரும் உங்கள National Crush னு சொல்றாங்களே, அத பத்தி என்ன நினைக்கிறீங்க - ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதில்.

By Rajkumar · 29/6/2021

இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

இதையும் பாருங்க : முதல் தமிழ் படத்தில் கிடைத்த ஏமாற்றம் - சீரியலுக்கு வந்த கதை குறித்து பூவே உனக்காக சீரியல் நடிகை.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது. அதிலும், நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று டைப் செய்தால், நடிகை ராஷ்மிகா பெயர் இடம்பெறுகிறது. அவர் பிரபலமான ஹீரோயின்களை முந்தி, இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர், எல்லாரும் நீங்கள் தான் National Crush என்று சொல்கிறார்களே அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு தான் வெட்கப்படும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, எனக்கு பிடித்து இருக்கிறது, அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் #NationalCrushRashmika என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்ததை பதிவிட்ட ராஷ்மிகா, இந்த ரசிகர்கள் உண்மையிலேயே சிறப்பானவர்கள். புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் அன்பு என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full