8 ஆண்டுகள் முடிந்தது, ஆனால் 24 மணி நேரத்தில் எல்லை தாண்டி விட்டார்கள் - ராஷ்மிகா ஆவேசம்
கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் ராஷ்மிகா- விஜய் தேவர் கொண்டா திருமண செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகா- விஜய் தேவர் கொண்டா
இருவரும் டேட்டிங் செய்கிறார், காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. அதற்கு ஏற்ப இருவருமே பல இடங்களில் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு சில சமீபத்தில் கூட விஜய் தேவர் கொண்டாவை காதலிப்பதாக மறைமுகமாக ராஷ்மிகா உறுதி செய்திருந்தார். இதை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் ராஷ்மிகா-விஜய் தேவர்கொண்டா உடைய நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது.
இருந்தாலும் இது குறித்து இருவருமே எந்த ஒரு தகவலுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். இதை அடுத்து ராஷ்மிகா – விஜய் தேவர்கொண்டா திருமணம் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானில் தான் நடைபெற்றது. இதில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருந்தார்கள். மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் இருவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும், ராஷ்மிகா திருமணம் முடிந்தவுடன் அவரைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ராஷ்மிகா திருமணம்:
அந்த வகையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின் உடைய அம்மா சுமன் மந்தனா பேசிய ஒரு பழைய ஆடியோ கிளிப் ஒன்று சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. அதில் ராஷ்மிகா- ரக்ஷித் செட்டினுடைய நிச்சயதார்த்தம் நின்று போனது பற்றியும், ரக்ஷித் குடும்பத்தினர் ராஷ்மிகாவை சினிமாவில் நடிக்க கூடாது என்று சொன்னதாகவும் பல கருத்துக்கள்
இடம்பெற்றது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஷ்மிகா மந்தனா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவது, டார்கெட் செய்வது, பழிவாங்குவது போன்ற செயல்களை எல்லாம் செய்ய தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
— Rashmika Mandanna (@iamRashmika) March 12, 2026
ராஷ்மிகா பதிவு:
நான் சொல்லாத விஷயங்கள் எல்லாம் கதைகளாக சித்தரித்து பிரபலத்திற்காக பெரிது படுத்துவதையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதெல்லாம் என்னை காயப்படுத்தினாலும் நான் பொறுமையாக தான் இருந்தேன். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் நடந்த விஷயங்கள் எல்லை தாண்டி இருக்கிறது. எட்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த தனிப்பட்ட உரையாடலை அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. எட்டு ஆண்டுகளாக தாக்குதல்கள் என்னை மட்டும் பாதிக்கும்போது நான் மௌனமாக இருந்தேன். ஆனால், இன்று மற்றவர்கள் இழுக்கப்படும் போது இனி மௌனமாக இருக்க முடியாது.
https://www.youtube.com/watch?si=EHUXRtafapAf3AWg&v=NENhVPsNbgc&feature=youtu.be
சர்ச்சைகளுக்கு பதிலடி
நடந்து முடிந்த கசப்பான விஷயங்களை மீண்டும் கிளருவது என்னை ரொம்பவே காயப்படுத்துகிறது. திருமணத்திற்கு பிறகு என்னுடைய புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ள நிலையில் இது போன்ற செயல்கள் தேவையற்றவை. என்னை விமர்சிப்பதோடு மட்டுமில்லாமல் என் குடும்பத்தையும் இதில் இழுத்து தவறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த ஆடியோவில் உள்ள தகவல்கள் எல்லாம் சித்தரிக்கப்பட்டது. அந்த ஆடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கும் ஊடகங்கள் உடனடியாக நீக்க கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நம் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை நமக்கு மட்டும் தான் இருக்கிறது. நம் வாழ்வு நம்முடையது என்று கூறியிருக்கிறார்