சிறு வயதில் நான் தியேட்டரில் பார்த்த முதல் படமே விஜய்யின் இந்த படம் தான் - ராஷ்மிகா, ருசீகரம்.
“இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலம் அடைந்தவர். நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது.
https://twitter.com/iamRashmika/status/1261661997856288769
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நடிகை ராஷ்மிகா அவர்கள் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர்.
நடிகை ராஷ்மிகா தற்போது வரை தமிழ் மொழி படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை தன் பக்கம் கட்டி இழுத்தவர். மேலும், இவருக்கு தமிழில் பிடித்த நடிகை என்றால் அது விஜய் தான், அதனை பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளார் ராஷ்மிகா. அவ்வளவு ஏன் ? இவர் தியேட்டரில் பார்த்த முதல்படம் கூட விஜய்யின் படம் தானாம்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கு ராஷ்மிகா அடிக்கடி தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் ரசிகர் ஒருவர் 'தியேட்டரில் நீங்கள் பார்த்த முதல் படம் எது' என்று கேட்டதற்கு 'கில்லி படம் தான்' என்று பதில் அளித்துள்ளார். தற்போது நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிக்கும் 'சுல்தான்'படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி உள்ளார்.