ராஷ்மிகா படத்திற்கு தடை. பெண்ணுரிமை அமைப்புகள் வழக்கு பதிவு. அதிர்ச்சியில் படக்குழுவினர்.

By subhashini · 15/4/2020

இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா நடித்து உள்ள படத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. கன்னடம் மொழியில் இயக்குனர் நந்தா கிஷோர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பொகரு. இந்த படத்தில் துருவா சார்ஜா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டாலும் பல பேர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். இந்த படத்தில் மிகப் பெரிய ரவுடிகள் கூட்டத்தை சேர்ந்த தலைவன் மாதிரி ஹீரோ துருவா சார்ஜா உள்ளார். துருவா சார்ஜா அவர்கள் அப்பாவி இளம்பெண் ராஷ்மிகாவை துரத்தி, மிரட்டி, அச்சுறுத்தி தன்னை காதலிக்க சொல்வது போல் இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.

கத்தி காட்டி மிரட்டுவது, பலவந்தமாக கட்டிப்பிடிப்பது, தூக்குவது, தலைமுடியை பிடித்திழுப்பது, மின்சார ஷாக் வைத்து விடுவேன் என பயமுறுத்துவது என்று எல்லை மீறிய பல காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்று உள்ளது. இந்த காட்சி சமூக ஆர்வலர்களை கோபப்பட வைத்துள்ளது. மேலும், பெண்ணுரிமை அமைப்புகள் எல்லாம் இந்த படத்தின் இயக்குனர் மீது வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த மாதிரி காட்சிகள் படத்தில் காண்பிக்கப்படுவதால் தான் நாட்டில் பல பெண்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தற்போது நடிகை ராஷ்மிகா அவர்கள் ரெமோ பட இயக்குனர் இயக்கி வரும் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக இவர் நடித்து வருகிறார். இது தான் இவரது முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full