‘29’ படத்தின் கதை இப்படி தான் உருவானது - இயக்குனர் ரத்னகுமார் சொன்ன சுவாரசிய தகவல்
மேயாத மான், ஆடை, குலு குலு போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ரத்தினகுமார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 29. இந்த படத்தில் விது- ப்ரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச், லோகேஷ் கனகராஜின்
நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். மே எட்டாம் தேதி இந்த படம் திரைக்கு வெளியாக இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய அறிமுக விழா நடைபெற்றிருக்கிறது. அதில் பேசிய இயக்குனர் ரத்னகுமார், மேயாத மான் படத்தை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்தேன். அப்போது மழை பெய்தது பேஸ்புக்கில், வாட்ச் இன் மைண்ட் என்றுதான் ஒரு விஷயத்தை போஸ்ட் செய்தேன்.
என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ரீதியில் ஒரு உரையாடலை எழுதி போஸ்டர் செய்தேன்.
29 படம்:
மறுநாள் அதற்கு நிறைய லைக்ஸ்க்கள், கமெண்ட்ஸ்கள் வந்தது. அதில், அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம் என்று சிலர் கேட்டிருந்தார்கள். அப்போ அந்த கேரக்டருக்கு நான் பெயர் வைக்கவில்லை. காரணம் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்துக் கொள்வார்கள் என்று விட்டேன். இன்னொரு நாள் அவர்கள் அடுத்தடுத்ததாக எங்கே சந்தித்திருப்பார்கள் என்று ஓர் இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் பார்த்த இந்த க்ளிம்ப்ஸ். இதை தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.
ரத்னகுமார் பேட்டி:
எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து, எதற்கு இப்போது நீங்கள் பேஸ்புக்கில் இப்படி ஒரு போஸ்ட் போடுகிறாய்? இதற்கு ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சின்ன குட்டி ஸ்பேஸ்குள் கனெக்ட் பண்ண முடியாது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீங்க உருவாக்கவில்லை என்றால் வேறு யாரேனும் இதை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலிட் செய்து விடுங்கள் என்றெல்லாம் சொன்னார். இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை youtube-ல் போஸ்ட் செய்தபோதும் நடந்தது. மது, மேயாத மான் படமாக ஆனதைப் போல் பேஸ்புக்கில் நான் போட்ட விஷயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது.
படம் உருவான விதம்:
நான் கதை எழுத உட்கார்ந்த போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம். கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை. அவர்தான் இந்த கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் உருவாக்க வேண்டும் என்றார். லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். கார்த்திக் சுப்புராஜ், ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்க சொன்னார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டி காட்டினார். அடையாளத்தை நாம் வாங்க முடியாது. அதுவாக அமைய வேண்டும்.
https://www.youtube.com/watch?v=8A4zSSop8zM
நான் யார் என்ற கேள்வி எனக்குள் வரும்போது நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் உருவாக்கி இருக்கிறேன். நான் யார் என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20களில் இருக்கும் ஒரு பெண் வருகிறார். அந்த பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். என்னுடைய 29 வயதில் நிறைய விஷயங்கள் நடந்ததால் இந்த படத்தினுடைய டைட்டில் 29 என்று வைத்தேன். இந்த டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இதை சொல்வதற்கு ஒரு போராட்டமே நடந்தது என்று கூறியிருக்கிறார்