சீரியல் விலகல், ரெட் கார்ட் விவகாரம் - சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த பிக் பாஸ் ரவீனா தாஹா
சீரியல் நடிகை ரவீனா தாஹாவிற்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக மீடியாவிற்குள் நுழைந்தார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘ஜில்லா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதற்கு பின் இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.
அதற்குப்பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இதற்கிடையே இவர் சின்னத்திரை சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ என்ற சீரியல் தான் இவர் நடித்த முதல் சீரியல். இதற்குப் பின் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ‘மௌன ராகம் 2’ சீரியலில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இவர் சீரியல்களில் மட்டும் இல்லாமல் நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.
ரவீனா குறித்து:
இவர் முதன் முதலில், ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அதற்குப் பிறகு, விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘குக் விஜய் கோமாளி சீசன் 4’ ஷோவிலும் கோமாளியாக பங்கேற்று இருந்தார். அதைத்தொடர்ந்து , ‘பிக் பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி 91 வது நாள் வெளியேறி இருந்தார். பின், ‘ஜோடி ஆர் யூ ரெடி’ நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று இரண்டாம் பரிசு வென்றிருந்தார். இதை அடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி சீரியலில் ரவீனா கமிட்டாகி இருந்தார்.
ரவீனா குறித்த சர்ச்சை:
சீரியல் ஒளிபரப்பாகும் முன்பே ரவீனா விலகி இருந்த செய்தி வைரலாகி இருந்தது. இதை அடுத்து ரவீனா, எந்த ஒரு சின்னத்திரை சீரியல், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்று ரெட் கார்டு போடப்பட்டு இருந்ததாக சில தினங்களாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு காரணம், இவர் சிந்து பைரவி சீரியல் ப்ரோமோ வெளியில் வந்த பிறகு திடீர் என விலகியது தான் என்று கூறப்படுகிறது. முதலில் முக்கிய கதாபாத்திரம் என்று சொல்லி பின் இரண்டு ஹீரோயின்கள் கதை என்று சொன்னதால் தான் ரவீனா வெளியேறிவிட்டார் என்றும் கூறப்பட்டது ஆனால், இது குறித்து ரவீனா எந்த ஒரு விளக்கமுமே கொடுக்காமல் இருந்தார்.
https://www.youtube.com/watch?v=b-EeJl0YkKM
ரவீனாவுக்கு ரெட் கார்ட்:
பின் சீரியல் தயாரிப்பாளர்கள், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ரவீனா மீது அப்போதே புகார் கொடுத்து இருந்தார்கள். அதில், இனி வேறு எந்த சீரியல், நிகழ்ச்சிகளிலுமே ரவீனா பங்கேற்க கூடாது என்றெல்லாம் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது. அதற்கேற்ப ரவீனாவும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலுமே, சீரியல்களிலுமே தலை காட்டாமல் இருந்தார். சமீபத்தில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ரவீனா கலந்திருக்கிறார்.
ரவீனா பேட்டி:
இதன் மூலம் இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட பஞ்சாயத்து மீண்டும் புகைய தொடங்கியது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ரவீனா, என் மீது புகார் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், ரெட் கார்ட் கொடுக்கப்படவில்லை. அதோடு இந்த விவகாரம் சமூகமாக முடிந்துவிட்டது. அதனால் இனி நான் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொடரலாம், சீரியலிலும் நடிக்கலாம். எந்த பிரச்சினையுமே இல்லை. அதே போல் நான் சிந்து பைரவி சீரியலில் இருந்து வெளியேறியதற்கு காரணம் என்னுடைய பர்சனல். வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.