'வாடி என் தங்கம்' - தன்னை போலவே ஆடி அசத்திய ரவீனாவை பார்த்ததும் கட்டி அணைத்து பாராட்டிய வடிவேலு.

By Manikandan · 11/12/2022

ரவீனாவின் நடனத்தை பார்த்து வைகைப்புயல் வடிவேலு வாயைப் பிளந்து ரசித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக மீடியாவிற்குள் நுழைந்தார். இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தின் மூலம் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்த்திழுத்தார் ரவீனா.

https://www.youtube.com/watch?v=qmS9o6ciinc

இந்த படத்தில் இவர் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார். அதே கூட இவர் விஜய்யின் ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இப்படி இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து இருந்தார்.

ரவீனா நடிக்கும் சீரியல்கள்:

இவர் நடிகை மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்து தன் திறமையை காண்பித்து வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம் 2’ என்ற தொடரில் நடித்து வருகிறார். முதல் சீசனை போல இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் சக்தி என்னும் ரோலில் ரவீனா நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலுவின் பாடலுக்கு ரவீனா ஆடி இருக்கும் செம குத்தாட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=hB7v594EVfw

வடிவேலு திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார். லைகா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து இருக்கிறார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்:

மேலும், இவர்களுடன் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா சமீபத்தில் நடைபெற்றது.

https://www.youtube.com/shorts/YU68oBc00jk

ரவீனாவை பாராட்டிய வடிவேலு:

இதில் வடிவேலு உடைய பாடலுக்கு நடிகை ரவீனா வடிவேல் போலவே நடனமாடி இருந்தார். இதை பார்த்து ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து வடிவேலு ரசித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் வடிவேலு ரவீனாவை அழைத்து வாழ்த்து தெரிவித்து சந்தோஷப்பட்டார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full