ஆரம்பிக்கும் முன்னே சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா, எந்த சீரியல் தெரியுமா ?
சீரியல் துவங்கும் முன்பே நடிகை ரவீனா தாஹா அதிலிருந்து விலகி இருக்கும் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக மீடியாவிற்குள் நுழைந்தார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த 'ஜில்லா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதற்கு பின் இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் நடித்து இருந்தார்.
அதற்குப்பின் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, இவர் நடித்த 'ராட்சசன்' படம் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதற்கிடையே இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான 'பூவே பூச்சூடவா' என்ற சீரியல் தான் இவர் நடித்த முதல் சீரியல். இதற்குப் பின் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான 'மௌன ராகம் 2' சீரியலில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இவர் சீரியல்களில் மட்டும் இல்லாமல் நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.
ரவீனா குறித்து:
இவர் முதன் முதலில், 'டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2' நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அதற்குப் பிறகு, விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி சீசன் 4' ஷோவிலும் கோமாளியாக பங்கேற்று இருந்தார். அதைத்தொடர்ந்து , 'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி 91 வது நாள் வெளியேறி இருந்தார். பின், 'ஜோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று இரண்டாம் பரிசு வென்றிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, ரவீனா எப்போதும் சோசியல் மீடியாவிலும் படு அக்டிவாக இருப்பவர்.
https://www.youtube.com/watch?v=b-EeJl0YkKM
விஜய் டிவி புது சீரியல்:
இந்நிலையில், தற்போது ரவீனா ஒரு சீரியலில் கமிட்டாகி பிறகு விலகி இருக்கும் செய்தி தான் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் அடுத்தடுத்து பழைய சீரியல்கள் முடிவுக்கு வரும் நிலையில், புது சீரியல்களை ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் 'சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்' என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக, ப்ரோமோ வெளியானது. இது ரெண்டு ஏட்டிக்கு போட்டியான ஜோடிகள் வாழ்க்கையில் இணைந்தால் என்ன நடக்கும் என்பது என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.
சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்:
கூடிய விரைவில் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், தற்போது இந்த சீரியலில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்த ரவீனா தாஹா வெளியேறி உள்ளாராம். மேலும், இவருக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வீட்டுக்கு வீட்டு வாசப்படி' சீரியலில் பயங்கர வில்லியாக நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் திரவியம் ராஜ்குமரன், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பவித்ரா பி நாயக் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
ரவீனா விலகல் :
மேலும், இந்த சீரியலில் ஆனந்த் கிருஷ்ணனுக்கு ஜோடியாக தான் ரவீனா தாஹா நடிக்க இருந்தது. தற்போது ரவீனா வெளியேறி உள்ளதால், ஆர்த்தி சுபாஷ் இந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏட்டிக்கு போட்டியாக இருக்கும் இந்த ஜோடிகள் இடையே நடக்கும் காதல் திருமணத்தில் முடிந்தால், என்னவெல்லாம் நடக்கும் என புதுமையான கதைகளத்தோடு இயக்குனர் இயக்கியிருக்கிறாராம். சமீபத்தில் தான், 'அய்யனார் துணை' சீரியலின் பிரமோ வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டிய நிலையில், இந்தத் தொடரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.