இயக்குனர் சொல்லாமல் பஹத்திற்கு முத்தம் கொடுத்தேனா ? சர்ச்சைக்கு பதிலளித்த ரவீனா.

By Arun · 26/7/2023

மாமன்னன் படத்தில் இயக்குனர் சொல்லாமலேயே பஹத் பாசிலுக்கு முத்தம் கொடுத்ததாக பரவும் வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை ரவீனா. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி. இவர் தன்னுடைய இரண்டு வயதிலேயே டப்பிங் ஆர்டிஸ்ட் பணியை தொடங்கினார். இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். அதிலும், ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ரவீனா குரல் கொடுத்து இருக்கிறார்.

கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'லவ் டுடே' படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மனைவியாகவும் ரவீனா நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து மாமான்னன் படத்தில் பஹத் பாஸில் மனைவியாக நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இவர் குறைவான காட்சியே நடித்து இருந்த நிலையில் இவருக்கு இந்த படத்தில் ஒரு வசனம் கூட இல்லை என்பது பெருத்து ஏமாற்றம்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியில் பஹத் பாசில் ரவீனாவை கட்டி அணைப்பது போல ஒரு காட்சி வரும். அந்த கட்சியின் போது இயக்குனர் சொல்லாமலேயே ரவீனா, பஹத் பாசிலுக்கு முத்தம் கொடுத்துவிட்டதாகவும் அதனால் பஹத் பாசில் சட்டையில் ரவீனாவின் லிப்ஸ்டிக் கரை பட்டுவிட்டதாகவும் இதனை எடிட்டிங்கின் போது கவனித்து Cg மூலம் அந்த முத்த கரையை நீக்கியதாகவும் சமூக வளைத்ததில் செய்திகள் பரவியது.

வீடியோவில் 8 நிமிடத்தில் பார்க்கவும் :

https://www.youtube.com/watch?v=WT9-55tcMKg&t=491s

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரவீனாவிடம் இதுகுறித்து கேட்க , இதற்கு விளக்கமளித்த அவர் 'அவருக்கு(பஹத்) திருமணம் ஆகவில்லை என்றாலும் அப்படி நடந்திருக்கலாம் என்று வேடிக்கையாக சொன்ன ரவீனா.. அந்தக் காட்சியில் அவர் என்னை கட்டிப்பிடிக்கும் போது அவரது கை என் தலையில் இருந்தது. அதனால் என்னுடைய உதடு அவரது சட்டையில் அப்படியே பதிந்து விட்டது.

நான் அவருக்கு முத்தம் கொடுக்கவில்லை. பின்னர் அதை நானே தான் கண்டுபிடித்து இயக்குனரிடம் அடுத்த சாட்டில் அதை சரி செய்து கொள்ளுங்கள் சார் என்று சொன்னேன். பின்னர் அடுத்த காட்சியில் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு வந்து விட்டார்கள். அதேபோல முதல் நாளே மாறி செல்வராஜ் சார் என்னிடம் 'மேக்கப் போடுவீர்களா' என்று கேட்டார். ஆனால், நான் என்னுடைய உதடு இயற்கையாகவே அப்படித்தான் இருக்கும் என்று பொய் சொல்லி விட்டேன்.

ஆனால் படப்பிடிப்பின் போது இப்படி நடந்ததால் அன்று கேட்கும்போது என்னிடம் பொய் தானே சொன்னேன் என்று சொன்னார். அப்போது தான் பொய் சொன்னால் என்றாவது கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம் என்று தோன்றியது என்று கூறினார் ரவீனா. மேலும், அந்த காட்சியில் அப்படி ஆனதும் பஹத் பாஸில் சார் கூட ஒத்துழைத்து உடனே வேறு சட்டை மாற்றிக் கொண்டு வந்து விட்டார். மேலும் அந்த காட்சியை பலமுறை எடுத்தோம் இருந்தும் முதல் முறையாக எடுத்து காட்சியில் தான் எமோஷன் ஒழுங்காக வந்தது. அதனால் தான் அந்த காட்சியில் லிப்ஸ்டிக் கரையை சிகிச்சை செய்து மறைத்து விட்டார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full