சூர்யாவுடன் லவ் டுடே பட நடிகை சிறு வயதில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் லவ் டுடே.

இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்கள் கூட இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

Advertisement

ரஜினி கூட பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 70 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து தற்போதும் பல திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கில் கூட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லவ் டுடே படம் வெளியானதில் இருந்தே அந்த படத்தில் நடித்த பலரையும் சமூக வலைதளத்தில் தேடி தேடி சென்று பார்க்கின்றனர் ரசிகர்கள். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் நாயகையாக நடித்த இவானாவிற்கு இணையாக இந்த படத்தில் யோகி பாபுவின் ஜோடியாகவும் நாயகனின் அக்காவாகவும் நடித்த நடிகைக்கும் ரசிகர்கள் மத்தியில் பார்ட்டுக்கள் கிடைத்தது. அந்த வகையில் இந்த புகைப்படத்தில் சூர்யாவுடன் இருப்பது வேறு யாரும் இல்லை லவ் டுடே படத்தில் நடித்த ரவீனா தான்.

Advertisement

ரவீனா அவர்கள் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். இவர் தன்னுடைய இரண்டு வயதிலேயே டப்பிங் ஆர்டிஸ்ட் பணியை தொடங்கினார். இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு என பல மொழி நடிகைகளுக்கும் குரல் கொடுத்து உள்ளார்.

Advertisement

ரவீனா தாய் ஸ்ரீஜா அவர்களும் சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஒரு சில படங்களில் நாயகையாகவும் நடித்து இருக்கிறார். அதுவும் குறிப்பாக காவல் துறை உங்கள் நண்பன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.தனது குரல் மட்டும் இனிமை இல்லை தான் நடிப்பிலும் கெட்டிகாரி தான் என்பதை அந்த படத்தில் நிரூபித்து இருப்பார் ரவீனா.

Advertisement