பாடகியுடன் கைகோர்த்து திருமணத்திற்கு சென்ற நடிகர் ரவி மோகன் - காட்டுத்தீயாய் பரவும் புகைப்படங்கள்

By subhashini · 9/5/2025

பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக நடிகர் ரவி மோகன் சென்று இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமந்தா-நாக சைதன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜி.வி பிரகாஷ் – சைந்தவியை தொடர்ந்து கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார். அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள்.

ரவி-ஆர்த்தி விவாகரத்து:

அப்படி எல்லாம் பேசாதீங்க. அவர் நிறைய உதவி செய்திருக்கிறார். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருந்தார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் நெடிசன்கள் கேட்ட கேள்விக்கு கெனிஷாவும் பதிலடி கொடுத்திருந்தார். இதை அடுத்து தன்னுடைய உடமைகள் எல்லாம் மீட்டு தர சொல்லி ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்ததாக கூறப்பட்டது. இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

ரவி மோகன்-ஆர்த்தி சர்ச்சை:

அதன் பின் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தார். பின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் ‘சமரச தீர்வு’ மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த கூறியிருந்தது. ஒரு மணி நேரம் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. இருந்தாலுமே இருவருக்கும் இடையே எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. இதை அடுத்து ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் பாடகி கெனிஷா உடன் ஜோடியாக ஜெயம் ரவி திருமணத்திற்கு வந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவி-கெனிஷா புகைப்படம்:

அதாவது, தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் ஐசரி கணேஷ். இவருடைய மகள் ப்ரீத்தாவிற்கு தான் இன்று சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருக்கிறார். இருவருமே மேட்சிங் உடை அமர்ந்திருந்தார்கள். இது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=VroX_W63YW0

நெட்டிசன்கள் சலசலப்பு:

இதற்கு நெட்டிசன்கள், நண்பர் என்று சொல்லிக்கொண்டு இப்படி எல்லாம் வருவதா? ஒருவேளை இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்களா? ஆர்த்தி சொன்னது போல் இவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கிடையில் ரவி அவர்கள் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ‘பிரதர்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் நடிக்கிறார். இது தவிர கராத்தே பாபு என்ற படத்திலும் ரவி கமிட்டாகி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full