முக்தார் பேட்டியில் இந்த கேள்வி கேட்டார் நான் பதில் சொன்னேன், ஆனால், அத எடிட் பண்ணிட்டார் - ரவீந்தர் வெளியிட்ட வீடியோ.

By Rajkumar · 10/9/2022

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு முதன் முதலாக தன்னுடைய முன்னாள் கணவர் குறித்து சீரியல் நடிகை மகாலட்சுமி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.

படிப்பு முடிஞ்சதும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அரசி என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மகாலட்சுமி முதல் திருமணம்:

இவர்களுக்கு சச்சின் என்ற ஆறு வயது மகனும் இருக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தன்னுடைய மகனுடன் மகாலட்சுமி தனியாக தான் வாழ்ந்து வருகின்றார். பின் தொடர்ந்து மகாலட்சுமி சீரியல் நடித்து வருகிறார். சன் டிவி, ஜீ தமிழ் என பிரபலமான சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=ln3S7IwoPck

மகாலட்சுமி நடிக்கும் சீரியல்:

இடையில் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி தொடர்பு இருப்பதாக ஈஸ்வரனின் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்திருந்தார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியிருந்தது. அப்போது கூட மகாலட்சுமியின் முதல் கணவர் அனில் செய்தியாளர்களை சந்தித்து தங்களோடு திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதற்குப்பின் மகாலட்சுமி தன்னுடைய கேரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் வில்லியாக மிரட்டிக்கொண்டு வருகிறார்.

மகாலட்சுமி இரண்டாவது திருமணம்:

இந்த நிலையில் மகாலட்சுமி இரண்டாவது ஆக தயாரிப்பாளர் ரவீந்திரதை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் தான் இவர்களுடைய திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலருக்கும் ஷாக் என்று சொல்லலாம். மேலும், இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததை விட பலரும் விமர்சனம் தான் செய்திருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=IDCcv52cxYs&t=508s

முக்தார் பேட்டியில் ரவீந்தர் - மஹாலக்ஷ்மி :

இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் மகாலட்சுமி- ரவிந்தர் இருவரும் பல நேர்காணல்களில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்கல். அந்த வகையில் பிரபல போட்டியாளரான முக்தாரின் நேர்காணலில் ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். இதில் ரவீந்தர் முதல் மனைவியை பிறந்தது முதல் மஹாலக்ஷ்மியை திருமணம் முடித்த காரணம் வரை நோண்டி நொங்கெடுத்துள்ளார் முக்தார். தற்போது இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=AQpSBKUS658

ரவீந்தர் பதிலடி :

ஒரு சில youtube சேனல் என்னுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் ஆனால் ஒரு சில வெட்டுகளில் ஆங்கர்கள் தரம் தாழ்ந்து சில விஷயங்களை கேட்கிறார்கள் பார்வதி முக்தார் போன்றவர்கள் சில கேள்விகளை கேட்கும் போது அவர்களுக்கு தான் அது தோன்ற வேண்டும் நீங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து கேள்வி கேட்டாலும் நான் தரம் தாழாமல் பதில் சொல்லும் பக்குவம் எனக்கு இருக்கிறது.முத்தார் பேட்டியில் கூட காதலுக்கு கண் இல்லையா என்று கேள்வி கேட்டார். அதற்கு நான் வாழ்வதற்கு அறிவு இருக்கிறது. காதலுக்கு ஏன் கண் தெரிய வேண்டும் என்று கூறினேன். ஆனால், அதனை அவர் எடிட் செய்து விட்டார் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full