மவனே இன்னோரு தடவ இந்த தப்ப பண்ண - ரவீந்தர் செயலால் கிளம்பிய விவகாரத்து சர்ச்சைக்கு மஹாலக்ஷ்மி பதிலடி.

By Rajkumar · 27/5/2023

சமீபத்தில் திருமணம் முடித்த ரவீந்தர் - மஹாலக்ஷ்மி விவாகரத்து பெறப்போகிறார்கள் என்று சமுக வலைதளத்தில் செய்திகள் பரவிய நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் மஹாலக்ஷ்மி. கடந்த சில மாதங்களாக சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக சென்று இருந்தது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன்- நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் தான். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர்.

இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது. மேலும், வனிதா – பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவிக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார்.

மஹாலக்ஷ்மி குறித்த தகவல் :

தற்போது இவர் பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருந்தார். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹாலக்ஷ்மி. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் கேரியரை தொடங்கினார். பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார்.

ரவீந்தர் - மஹாலக்ஷ்மி திருமணம் :

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் மஹாலக்ஷ்மி, ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுஇருந்தார். இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் இவர்கள் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தனர்ட். ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக துவங்கியனர்.

தனியாக ரவீந்தர் போட்ட பதிவு :

திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின் புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்துவருகிறார்கள். ஆனால், சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று விவாகரத்து விவாதம் வரை சென்றுவிட்டது. சமீபத்தில் ரவீந்தர் 'தனது இன்ஸ்டாம் பக்கத்தில் வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பதிவு போட்டு இருந்தார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :

இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் பிரிந்து விட்டனரா என்ற கோணத்தில் கமெண்ட் செய்து வந்தனர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவீந்தர் தனது மனைவி சொன்ன விஷயத்தை பதிவிட்டுள்ளார். அதில் 'டேய் புருஷா தனியா இருக்க போட்டோ போடாதன்னு எத்தனை டைம் சொன்னேன். இப்போ எல்லா சோசியல் மீடியாவும் நாம பிரிந்துவிட்டதா சொல்றாங்க. மவனே இன்னொரு வாட்டி இந்த தப்ப பண்ண. ஒரு நாளைக்கு 3 முறை செய்ய உப்மா தான். யூடுயூப் சேனல்கள் பற்றிய என்னுடைய மைண்ட் வாய்ஸ் : இன்னுமாடா நாங்க ட்ரெண்டு, இதுக்கு இல்லையா ஒரு எண்டு என்று பதிவிட்டுள்ளார்.'

Tamil Behind Talkies AMP · Quick view
View full