மஹாலக்ஷ்மி கர்பமா இருக்காரா ? ரவீந்தர் பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட்ஸ்.

By Rajkumar · 16/11/2022

சமீபத்தில்தான் மகாலெட்சிமி - ரவீந்தர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்கள் மட்டுமே கடந்துள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின்னர் நாடகங்களில் வில்லியாகவும், துணை கதாபாத்திரமாகவும் நடித்து 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர்தான் மகாலட்சுமி. சின்னத்திரையில் "அரசி" என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்து பல வருடங்களுக்கும் மேலாக சீரியல்களில் நடித்தது வருகிறார். இவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் அணில் என்பவருடன் ஆகியிருந்தது பின்னர் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது.

இந்த நிகழ்விற்கு பின்னர் "தேவதையை கண்டேன்" என்ற சிரியலில் நடித்து வந்த மகாலட்சிமி சகநடிகரான ஈஸ்வரூம் இவரும் நெருங்கி பழகி வருவதாக கூறினார் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ். பின்னர் இருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரனின் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்திருந்தார். இந்த நிகழ்வு அப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. அதன் பின்னர் பல சீரியல்களில் நடித்து வந்த மகேஸ்வரி தற்போது விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தான் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரரை காதலித்து வந்த மகாலட்சிமி அவரை ரகசியமாக திருமணமும் செய்து கொண்டனர். பின்னர் அவரின் சோசியல் மீடியாவில் திருமண புகைபபடங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் இவர்களின் திருமணம் பலரின் விமர்சனத்திற்க்கு உள்ளாகியது இருந்தாலும் எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது.

இதில் உங்களுக்கென்ன என்று மகிச்சியாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். சில நடக்களுக்கு முன்னர் கூட இருவரும் தலை தீபாவளி கொண்டாடிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகியிருந்தது.அதன் பின்னர் கூட ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருகிய முட்டைகள் பத்திரத்தில் இருக்கும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு "என் வாழ்கையிலேயே இப்படியொரு வேகவைத்த கருகிய முட்டையை பார்த்ததில்லை" என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும், புது வாழ்கை… புது மனைவி… சூப்பர் குக். என்று பதிவிட்டு என்னுடைய எடையை இவர் சீக்கரம் குறைத்து விற்றுவாள் என்று கூறியிருந்தார்.தற்போது தன்னுடைய எடையை குறைப்பதற்காக ரவீந்தர் தினமும் அவிச்ச முட்டை மட்டும்தான் சாப்பிட்டு வருகிறாராம்.சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் தினமும் அவர் தன் மனைவியுடன் வெளியில் செல்லும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஒரு புகைப்படத்தில் மகாலெட்சிமியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் ரசிகர்கள். அதாவது அந்த புகைப்படத்தில் மகாலெட்சிமி கர்ப்பமாக இருப்பதை போன்று இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணமாகி இரண்டு மாதங்களே ஆனா நிலையில் கர்ப்பத்தை பற்றி மகாலெட்சிமி - ரவீந்தர் தம்பதி உறுதிப்படுத்தவில்லை. நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் இதற்க்கு என்ன இவர்கள் பதில் சொல்கிறார்கள் என்று.

Tamil Behind Talkies AMP · Quick view
View full