தயவுசெய்து அப்படி யாரும் போடாதீங்க டா - விக்கி நயன் போல தன் மனைவியுடன் பிரைவேட் ஜெட்டில் சென்ற புகைப்படத்தை பதிவிட்ட ரவீந்தர்

By Rajkumar · 11/9/2022

சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனை முன்னாள் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் திருமணம் கழித்த செய்திகள் வெளியான போது சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. தமிழில் 'நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

மேலும், வனிதா - பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார். தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வரும் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக புதிய ஷாக்கைகொடுத்து இருந்தார்.

Vj To சீரியல் நடிகை :

சின்னத்திரை சிரியலில் மிக பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

மஹாலக்ஷ்மி திருமண வாழ்க்கை :

இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துஇருக்கிறார்.நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தேவதையை கண்டேன்" என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

மஹாலக்ஷ்மி ஈஸ்வர் சர்ச்சை :

இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும், வில்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வந்தனர். இந்த தேவதையை கண்டேன் சீரியல் மூலம் மஹாலக்ஷ்மிக்கும், ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து இருந்தது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படி ஒரு நிலையில் தான் மஹாலக்ஷ்மி ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். ஒன்றரை ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த தன் மனைவிக்கு ரவீந்தர் பல பரிசுகளை அளித்து இருக்கிறாராம்.

தனி விமானத்தில் ஹனிமூன் :

இப்படி இருக்கிற நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் போல பிரைவேட் ஜெட்டில் சென்றிருக்கும் புகைப்படம் ஒன்றை ரவீந்தர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் ரவிந்தர் தயவுசெய்து அப்படி யாரும் போடாதீங்க டா. திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் குலதெய்வ கோவிலுக்கு போறேன், செஞ்சிடாதீங்க இந்த போட்டோவை” என கூடவே விளக்கத்தையும் அளித்திருக்கிறார் ரவீந்தர். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full