அருண் சொல்லிக் கொடுத்து அர்ச்சனா டைட்டில் வென்றாரா?' - உண்மையை உடைத்த பிக் பாஸ் ரவீந்தர்

By subhashini · 22/10/2024

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து ரவீந்தர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை பெற்று சாச்சனா வெளியேறி மீண்டும் உள்ளே வந்தார். பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு விஜய் சேதுபதியை பார்த்து ரவீந்தர், செஞ்சிட்டிங்க சார் என்று பேசி இருந்தார்.

ரவீந்தர் பேட்டி:

பின் ரவீந்தர், ஒவ்வொரு போட்டியாளர்களை பற்றியும் புட்டு புட்டு வைத்திருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு ரவீந்தர் அளித்த பேட்டியில், எனக்கு இதற்கு முன்னாடியே பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் அந்த சமயம் என்னால் போக முடியவில்லை. இந்த முறையும் நிகழ்ச்சிக்கு போகலாம் என்று முடிவு செய்த பிறகு திடீரென்று என்னுடைய அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போன அன்னைக்கு தான் என்னுடைய அப்பாவுக்கு சர்ஜரி சொல்லி இருந்தார்கள். இது இரண்டாவது சர்ஜரி என்பதால் கொஞ்சம் கிரிட்டிக்கல்.

பிக் பாஸ் போக காரணம்:

எங்க அப்பாவுக்கு பிடித்த நிகழ்ச்சி பிக் பாஸ். அதனால் அப்பா குணமாகி விடுவார். நீங்க போங்க என்று என்னுடைய குடும்பமே நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அதனால் தான் நானும் நிகழ்ச்சிக்கு வந்தேன். அவருக்கு பிடித்ததை செய்கிறோம் என்ற எண்ணத்தில் தான் பிக் பாஸ் வீட்டிற்கு போனேன். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த போது நாங்கள் ஆறு பேரும் வந்த பின் வீடு ஓபன் ஆனது. அதற்கு காரணம், சாச்சனா ரெஸ்ட் ரூம் போகணும் என்று சொன்னார். அதற்காக மட்டும் தான் வீட்டை ஓபன் பண்ணார்கள். அப்போதே கேம் தொடங்கி விட்டது. ஒவ்வொருவருக்கும் இன்னொருவர் மேல ஒரு பயம் இருக்கு.

https://www.youtube.com/watch?v=yxoKK2IAlnw

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

சாச்சனாவுக்கு நடந்த சாப்பாடு விஷயம் எனக்குமே நடந்திருக்கு. அந்த வீட்டில் எனக்கும் பாடி ஷேமிங் நடந்திருக்கு. குண்டா, தடியா எல்லாம் என்னை கிண்டல் பண்ணி இருக்காங்க. ரஞ்சித் சார் கண்ணு,சாமி என்று வெளியில் பேசிக் கொண்டாலும் உள்ளுக்குள்ள இருக்கும் ஒரு கோல்டு வார் தெரியும். என் மீது உண்மையாகவே அக்கறை இருந்தால் என்னை மோட்டிவேட் தான் பண்ணி இருக்கணும். முத்துக்குமரன் அதை செய்தான். பலரும் முத்து என் இடத்தை ரீபிளேஸ் பண்ண போறதா சொல்றாங்க. உண்மையில் முத்து என்னிடத்தை ரீபிளேஸ் பண்ண வில்லை. அவன் என்னை விட திறமையுள்ளவன்.

அருண் குறித்து சொன்னது:

அதேபோல் உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்கிறேன். நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததுமே எனக்கு அர்ச்சனா போன் பண்ணி பேசி இருந்தார். அர்ச்சனாவும் அருணும் பிரண்ட்ஸ் என்று எனக்கு தெரியாது. அவங்க நான் நல்லா ஆடினேன் என்று சொல்லிவிட்டு, அருண் இப்படி ஆடுவதைப் பார்த்தால் எனக்கு கஷ்டமாக இருக்கு. போன முறை அருணுக்கு தான் அந்த வாய்ப்பு வந்தது. அவன்தான் என்னை போக சொல்லி எனக்கு இந்த கேம் எப்படி விளையாடனும் என்று சொல்லிக் கொடுத்தான். அருண் கேம் விளையாடுவதை சொல்லிக் கொடுத்து நீ டைட்டில் வெற்றி பெற்றாயா? என்ற மாதிரி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் நல்ல பையன் தான். ஆனால், அவன் இன்னமும் இன்னசென்டாக நடிக்கிறான். பாரதி கண்ணம்மா 2 முடிஞ்சுமே எதற்கு? என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full