கணவரின் உடலை குறைக்க சமையல் அறையில் மகாலக்ஷ்மி செய்த கூத்தை பாருங்க - ரவீந்தர் பகிர்ந்த புகைப்படம்.

By Arun · 5/11/2022

மனைவி மகாலட்சுமி செய்த சமையல் புகைப்படத்துடன் ரவீந்திரன் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹாட் டாபிக்காக சென்று இருந்தது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன்- நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் தான். தமிழில் சில படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

மேலும், வனிதா – பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. தற்போது இவர் பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக புதிய ஷாக்கை கொடுத்து இருந்தார். சின்னத்திரை சிரியலில் மிக பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் கேரியரை தொடங்கினார்.

மஹாலக்ஷ்மி திருமண வாழ்க்கை :

பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

ரவீந்தர் – மஹாலக்ஷ்மி திடீர் திருமணம் :

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லியாக மிரட்டி வருகிறார். இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மி, தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் திருமணத்தில் தொடங்கி தற்போது வரை எங்கு சென்றாலும், என்ன பண்ணாலும் அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது.

திருமணத்திற்கு பின்:

சமீபத்தில் தான் இவர்களுக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்து இருந்தார்கள். பின் இவர்கள் திருமணம் முடிந்து பல பேட்டிகள் கொடுத்து இருந்தார்கள். அதோடு இவர்கள் திருமணம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு இருவரும் விளக்கம் கொடுத்து இருந்தார்கள். தற்போது இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் மகாலட்சுமி செய்த செயலை ரவிந்தர் சோசியல் மீடியாவில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.

ரவிந்தர் பதிவிட்ட புகைப்படம்:

அதாவது, முட்டை வேக வைக்க முடிவு செய்த மகாலட்சுமி. சிறிது நேரம் கழித்து அடுப்பை நிறுத்தாமல் விட்டிருக்கிறார். தண்ணீர் வற்றியயுடன் முட்டை கருகும் அளவிற்கு சென்று இருக்கிறது. அந்த புகைப்படத்தை பதிவிட்டுல ரவிந்தர் 'என் வாழ்க்கையிலேயே வேகவைத்த முட்டை இவ்ளோ கருகி பார்த்தது இல்லை. என் உடலை குறைப்பதை தவிர உனக்கு வேற வழியே இல்ல மஹாலக்ஷ்மி. புதிய வாழ்க்கை, என் மனைவி, அருமையான குக்' என்று தன்னுடைய சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full