நீ பக்கா FAKE, நீ INNOCENT-ஆ நடிக்கிற - ரவீந்தர் கொடுத்த நச் விமர்சனங்களின் வீடியோ இதோ
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை குறித்து ரவீந்தர் கொடுத்திருக்கும் ரீவியூ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஒரு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதை அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் தர்ஷிகா வெற்றி பெற்று தலைவராகி இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 8:
பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின்,ரவீந்தர்,சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்து இருந்தார்கள். அதோடு கடந்த வாரம் ரவீந்தர் செய்த பிராங் தான் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. ஒரு கட்டத்தில் ரவீந்தர் பயங்கரமாக கத்தி ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் பேசி இருந்தார். அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். இவரின் என்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையும் முதல் வாரத்தின் அனுபவத்தை குறித்து கேட்டிருந்தார். பின் ஒவ்வொருவருக்கும் அவர் பதில் அடியும் கொடுத்திருந்தார். அப்போது அவர், நீங்கள் விளையாட வந்திருக்கிறீர்கள். யாரும் சொகுசாக சாப்பிட்டு, தூங்க வரவில்லை என்றும் பேசி இருந்தார். குறிப்பாக, ரவீந்தர் செய்த பிராங்க் குறித்து விஜய் சேதுபதி வெளுத்து வாங்கி இருந்தார். நேற்று கடைசியில் ரவீந்தர் தான் வெளியே போனார். ரவீந்தரும் எந்த வருத்தமுமே இல்லாமல் ஜாலியாக வெளியே வந்தார். மற்ற போட்டியாளர்கள் அவரிடம் வருத்தமாக பேச வந்தாலுமே வேண்டாம் என்று சொல்லி வந்துவிட்டார்.
Fatman review about all contestants #BiggBossTamil8 #BiggBossTamil#BiggBossTamilSeason8
— Sekar 𝕏 (@itzSekar) October 13, 2024
pic.twitter.com/h9PIx10EGX
ரவீந்தர் கொடுத்த விமர்சனம்:
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு விஜய் சேதுபதியை பார்த்து ரவீந்தர், செஞ்சிட்டிங்க சார் என்று பேசி இருந்தார். விஜய் சேதுபதி, உங்கள் ஸ்டைலில் போட்டியாளர்களுக்கு ரிவியூ கொடுங்கள் என்று சொன்னார். அதற்கு ரவீந்தர்,
அர்னவ்- நீ பக்கா ஃபேக்
ரஞ்சித் சார்- சாமி, தங்கம் என்று சொல்வது ஸ்டேட்டர்ஜி தான்
தீபக்- எதிரியை முன்னாடி அடிக்கணும், பின்னாடி அடிக்காதே
அருண்பிரசாத்- நீ இன்னசென்ட் மாதிரி நடிக்காத.
சத்யா - இந்த நிகழ்ச்சிக்கு உன்னுடைய பாடி முக்கியம் இல்லை, மைண்ட் தான் வேணும்
விஜே விஷால்- நீ என்னை சமைச்சியே கொன்னுட்ட. நல்லா இருக்கு என்று வேற வழியில்லாமல் சொன்னேன்டா. இந்த வீட்டில் ஒரு என்டர்டைனர் என்றால் அது நீதான்.
ஜெஃப்ரி- பேசும்போது வார்த்தையை பார்த்து பயன்படுத்து. அது உன் வாழ்க்கைக்கு உதவும்.
பவித்ரா- இந்த கேமுக்கு நீ உண்மையாக இரு.
சௌந்தர்யா- உட்கார்ந்து பெஞ்சை தேய்ப்பதை விட்டு கேம் விளையாடு
தர்ஷா- நீ விளையாடுவதில் பாதி பேக். அது உள்ளே இருந்தபோது எனக்கு பச்சையாகவே தெரிந்தது.
சுனிதா- நீ ஹானஸ்ட், ரியல். தமிழ்நாடு உன்னை கொண்டாடும்.
தர்ஷிகா- நீ செம கேடி. பயங்கரமா ட்விஸ்ட் பண்ணி விளையாடுகிறாய்
ஜாக்லின்- நான் நம்புற இரண்டாவது ரியல் பர்சன் நீ தான்.
ஆர்.ஜே ஆனந்தி- பயந்து பயந்து ரொம்ப நாள் தள்ள முடியாது. சனி ஞாயிறு வந்தா மட்டும் ஸ்கோர் பண்ணுவது முக்கியமில்லை மத்த ஐந்து நாட்களிலும் ஸ்கோர் பண்ணனும்.
முத்துக்குமரன்- இந்த தளத்தை நன்றாக பயன்படுத்து
சாச்சனா- தேவையில்லாமல் நிறைய பேசாதே என்று ஒவ்வொரு போட்டியாளர்களை பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.