பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தானா? உண்மையை போட்டு உடைத்த ரவீந்தர்

By subhashini · 24/10/2024

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை வெல்பவர் குறித்து ரவீந்தர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை பெற்று சாச்சனா வெளியேறி மீண்டும் உள்ளே வந்தார். பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார்.

ரவீந்தர் பேட்டி:

மூன்றாவது வாரம் வித்தியாசமான டாஸ்கில் நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு ரவீந்தர் அளித்த பேட்டியில், நான் சீக்கிரமாகவே எலிமினேட் ஆனதற்கு அக்கறை, அன்பு தான் காரணம். இந்த வாரத்தில் யாரை காப்பாத்தணும் என்பதை பார்த்துவிட்டு யாரை எலிமினேட் பண்றாங்க என்பதை புரிந்து கொண்டேன். ஸ்ட்ராங் பிளேயர் என்றால் அவரவர் வந்த நோக்கத்தில் சரியாக விளையாடுவது தான். அப்படி பார்த்தால் முத்துக்குமரன் தான் அந்த வீட்டில் ஸ்ட்ராங் பிளேயர்.

பிக் பாஸ் குறித்து சொன்னது:

விஜய் சேதுபதி சொன்ன ஒவ்வொரு வார்த்தையுமே பொரிக்கலங்க வைத்திருக்கிறது. 7 சீசன் கேள்விகளுக்கு எட்டாவது சீசனில் ஒரே வாரத்தில் மக்கள் மனதில் இருந்த கேள்விகளை கேட்டு, பதிலை எங்கள் வாயிலேயே வர வைத்தார். விஜய் சேதுபதி சிறப்பாக செய்கிறார். இந்த சீசனில் அதிகம் கோபத்தை கட்டுப்படுத்துபவர் என்று பார்த்தால் ரஞ்சித், அருண் சொல்லலாம். பெண்களில் பவித்ரா. கோபத்தை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை விட சண்டை போடும்போது அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=fJmhuL69GnU

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

நான் இந்த பிக் பாஸ் வீட்டில் ஒழுக்கம் என்ற ஒன்றை கற்றுக் கொண்டேன். விமர்சித்து ஈசியாக விளையாடும் விஷயம் இல்லை என்பதையும் புரிந்து கொண்டேன். பிரச்சனை வரும்போது அதை எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள்? என்பதை பார்க்கும்போது இதற்கு முன்பு நான் இந்த நிகழ்ச்சியில் எந்த கோணத்தில் பார்த்து பேசினேன் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சிலருக்கு சில வாய்ப்புகள் கிடைக்காது. நான் என்னுடைய பணியை முழுமையாக செய்து கொள்ள இந்த நிகழ்ச்சி மூலம் வாய்ப்பு கிடைத்தது. நான் முதல் வாரத்தில் எலிமினேட் ஆகவில்லை என்றால் கண்டிப்பாக அருண், ரஞ்சித், சௌந்தர்யா ஆகிய மூவரில் ஒருவர் போய் இருப்பார்கள். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான்.

டைட்டில் வெல்பவர்:

விளையாட்டை சரியாக விளையாடுபவர்கள் என்று பார்த்தால் பெண்களில் தர்ஷிகா, ஜாக்லின், சுனிதா, பவித்ரா. ஆண்களில் விஷால், முத்து குமரன், தீபக். இவர்கள்தான் விளையாட்டை சரியாக கொண்டு போகிறார்கள். சரியாக விளையாடி யார் மக்கள் மத்தியில் ஆதரவை பெறுகிறார்களோ அவர்கள்தான் கண்டிப்பாக டைட்டில் வெல்வார்கள். இதுவரை பார்த்ததில் முத்துக்குமரன் தனக்கு கொடுத்த வேலையும் விளையாட்டையும் சரியாக செய்கிறான். கண்டிப்பாக அவன் இறுதி வரை சென்று வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full