ஏ.ஆர்.ரஹ்மான் மெழுகுவத்தி வெளிச்சத்தில் இசையமைக்க இதுதான் காரணமாம் - ஜாவத் அஃக்தர் கூறியுள்ள வினோதமான விஷயம்

By Rajkumar · 6/7/2024

தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மெழுகுவத்தி வெளிச்சத்தில் இசை அமைக்கும் பழக்கத்தைக் கொண்டவர் என்ற செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இசைப்புயல், மொசார்ட் ஆப் மெட்ராஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஏ.ஆர. ரஹ்மான். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரஹ்மான். கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

மேலும், இவர் சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'ஆஸ்கார் விருதையும் அதுவும் 2 விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ்பெற்றவர்'. சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் வளம் வரும் ஜாவத் அஃக்தர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து தனது பேட்டியில் கூறியுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் லகான், ஸ்வேட்ஸ், தில் சே போன்ற திரைப்படங்களில் பணியாற்றியவர்.

ஜாவத் அஃக்தர் பேட்டி:

பேட்டியில் அவர் , ' ரஹ்மான் கொஞ்சம் வித்தியாசமான மனிதர். அவர் இசையமைக்கும் விதமும் அப்படித்தான் இருக்கும். ஒருமுறை அவரது ஸ்டூடியோவிற்கு நான் சென்றபோது அவர் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றி அந்த வெளிச்சத்தில் அமர்ந்து பாடல்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார். அது எனக்கு புதிதாகவும் வித்தியாசமாகவும் இருந்தது என்றும் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்:

மேலும் அவர் இதைக் குறித்து ரஹ்மானிடம் கேட்டேன். அதற்கு அவர், 'இந்த ஸ்டூடியோவில் இருக்கும் எல்லா இசைக்கருவிகளும் இயந்திரங்கள் தான். இயந்திரங்களால் இந்த அறை நிரம்பி இருப்பது ஒரு விதமான செயற்கை தன்மையை ஏற்படுத்தும். அதனால், இந்த சேர்க்கை தன்மையை போக்கி, இயற்கையை கொஞ்சமாவது உணர வேண்டும் என மெழுகுவர்த்திகளை ஏற்றி அதன் வெளிச்சத்தில் இசையமைப்பேன்' என்று விளக்கம் அளித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி:

தொடர்ந்து ஜாவத் அஃக்தர், ரஹ்மானிடம் என்னைப் போன்ற தயாரிப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் இசை பற்றி ஏதும் தெரியாமலே பாடல்கள் இப்படித்தான் வேண்டும் என்று கேட்டு வாங்குவோம். அவரும் எங்களுடைய அறிவுரைகளை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டு எங்களின் மனதை அறிந்து இசையமைத்துக் கொடுப்பார். மேலும் ரஹ்மான், 'நான் மட்டும் ஒரு வேலையை செய்தால் அது ஒரே மாதிரியான படைப்பாகவே இருக்கும்'.

ஏ.ஆர்.ரஹ்மான் புகழ்ந்த ஜாவத் அஃக்தர்:

மற்றவர்களின் அறிவுரையை கேட்கும்போது பிறரின் ஐடியாக்களையும் கேட்டு இசையமைத்தால் புதியதாக படைப்புகள் உருவாகும்' என்று கூறுவார். இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பாதித்தது. நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அதில் இவை முக்கியமானவை என்று ரஹ்மானை புகழ்ந்து பேசி இருக்கிறார் ஜாவத் அஃக்தர். தற்போதைய ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், இங்கிலீஷ் என எல்லா மொழிகளிலும் இசை அமைப்பதில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full