ட்விட்டர் கணக்கை டெலிட் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன், இதுதான் காரணமா?

By krithika · 1/12/2024

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்து இருக்கும் தகவல்தான் இணையத்தில் காட்டு தீ போல பரவுகிறது‌. தனுஷ்-நயன்தாரா, இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகளில் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது. இதனால் திருமணம் தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. விக்கி – நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள்.

நயன் – தனுஷ் சர்ச்சை:

மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பே இந்த வீடியோவின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் தனுஷ்- நயன்தாரா இடையே பெரிய சர்ச்சை வெடித்து இருந்தது. அதனால், நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று வெளியிட்டு இருந்தார்.

நயன்தாரா போஸ்ட்:

அதில், ‘என்னுடைய ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணம் தெளிவாக புரிகிறது. இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல் பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களை ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே , நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தும் தனுஷ் NOC தரவில்லை என்றும் நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார்.

இயக்குனர்கள் வட்டமேசை :

அதைத்தொடர்ந்து, தனுஷின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தில் காட்சிகளிடம் பெற்றிருந்தன. அதனால், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் வழக்கு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விக்னேஷ் சிவன் அவர்கள் தனது மனைவி நயன்தாராவுக்கு ஆதரவாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் இயக்குனர் வட்டமேசை கான்ஃபரன்ஸில் விக்னேஷ் சிவன், LIC படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாகவும் பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர் அந்த படத்தில் இருந்து விலகியதால், புதிய கூட்டணியில் தானே இந்தப் படத்தை தயாரிப்பதாகவும் கூறியிருந்தார்.

டுவிட்டர் பக்கத்தை டெலிட் செய்த விக்கி:

மேலும், அஜித்தை வைத்து தான் காமெடி டிராக்டில் படம் இயக்க திட்டமிட்டதாகவும், லைகா நிறுவனம் அதை மறுத்ததால் அந்தப் படம் டிராப்பானதாகவும் விக்கி கூறியிருந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில், 'இந்தியன் 2, சந்திரமுகி 2 படங்களை புரொடியூஸ் செய்த லைகா நிறுவனமே உன் படத்தை ரிஜெக்ட் பண்ணி இருக்கிறது என்றால், நீ கொடுத்த ஸ்கிரிப்ட் எப்படிப்பட்டதாக இருக்கும்' என்று விக்கியை ட்ரோல் செய்து வந்தனர். மேலும், 'விக்னேஷ் சிவனை எல்லாம் டைரக்டர் ரவுண்டு டேபிள்க்கு கூப்பிடறாங்களா' என்றவாறு பதிவிட்டு வந்தார்கள். இந்நிலையில், தற்போது விக்கி தனது ட்விட்டர் பக்கத்தை டெலிட் செய்து உள்ளார். அதற்கும் இணையவாசிகள், 'ஒரு ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்ஸ் வச்சு, விக்னேஷ் சிவனை ட்விட்டரை விட்டே போக வச்சிட்டீங்களே டா' என்று ட்ரோல் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full