அஜித் பத்ம பூசண் விருதுக்கு தகுதியானவரா என்ற கேள்வி இருந்தால் உங்களுக்காக இந்த பதிவு.

By krithika · 27/1/2025

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் கூட துபாயில் நடந்த 24H கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் 'அஜித்குமார் ரேசிங் அணி' 992 பிரிவில் 3 வது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதற்கு அஜித் குமாருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இவருக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது அறிவித்து கௌரவித்துள்ளது.

அதாவது நமது நாட்டின் 76 ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்ட 139 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவித்து மத்திய அரசு கௌரவித்து உள்ளது. இதில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிடும். அதன்படி இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த ஜனவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அஜித்குமார் தகுதியானவரா:

இந்நிலையில், அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது ஏன் வழங்கப்பட்டது. அதற்கு அவர் தகுதியானவரா. அவர் என்ன சாதித்தார் என்று சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதனால் அவர் இதுவரை செய்திருக்கும் சாதனைகள் என்ன என்ன என்பதை இங்கு பார்ப்போம். இவர் தமிழ் சினிமாவில் 34 வருடங்களுக்கு மேல் பயணித்து வருகிறார். இவர் தேசிய விருது பெற்ற 'காதல் கோட்டை' படத்தின் கதாநாயகன். இந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள்

View this post on Instagram

A post shared by சௌந்தர் (@soundar_87)

கலை துறை:

அதோடு இவர் வாலி, வில்லன், வரலாறு ஆகிய மூன்று படங்களில் நடித்ததற்காக ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றார். அதோடு அஜித் குமார் மூணு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் நடிப்பில் வெளியான 'சிட்டிசன்' படத்தில் 9 கெட்அப்களுடன் குறிப்பிடத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் சிவாஜி கணேசனுக்குப் பிறகு அஜித் இந்த சாதனையை செய்துள்ளார். அதோடு இவர் ஆசை முதல் நேர்கொண்ட பார்வை வரை பல ப்ளாக் பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பங்களித்தவர்.

விளையாட்டு துறை:

அஜித் குமார் சினிமா மட்டுமில்லாமல் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார். இவர் 2003இல் நடைபெற்ற F2 போடியம் போட்டியின் வெற்றியாளர். அதோடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த 24H தொடரில் இவரின் அஜித்குமார் ரேசிங் அணி 992 பிரிவில் மூணாவது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்தது இந்திய மோட்டார்ஸ் போர்டில் ஒரு வரலாற்று தருணத்தைக் குறித்தது.

பொறியியல் துறை:

மேலும், அஜித் அவர்கள் ட்ரோன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 'Daksha Drone Team' இன் வழிகாட்டி ஆவார். இப்படி கலை, விளையாட்டு, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அஜித்குமார் சிறந்து விளங்கிறார். அவரது சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் பரவலாக அங்கரிக்கப்பட்டுள்ளன. கலை பிரிவின் கீழ் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டாலும், பல்வேறு துறைகளில் அவரது பங்களிப்பும் வெற்றியும் அவரை இந்த கௌரவத்திற்கு உண்மையிலேயே தகுதியானவர் ஆக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . வாழ்த்துக்கள், ஸ்ரீ பத்ம பூசண் அஜித் குமார் சார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full