இந்தியாவின் உலக அழகி என்ற பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார்.

Advertisement

இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா . நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இவருடைய மகள் பெயர் ஆராத்யா.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு தேவதையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார். மேலும், எத்தனை உலக அழகிகள் வந்தாலும் ஐஸ்வர்யா ராய் பிடித்திருக்கும் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. இந்நிலையில் தற்போது ஐஸ்வரியாவின் மகள் ஆராத்யாவை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Advertisement

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நடிகை ஐஸ்வர்யாவின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா!! என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். அமரர் கல்கி எழுதியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சி செய்தார்கள். ஆனால், இந்த படத்தை மணிரத்தினம் இயக்குகிறார். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி.

Advertisement

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

Advertisement