இனி ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாதா? நடிகை ரவீனாவின் ரெட் கார்டு விவாகரம்- பின்னணி இது தான்
சீரியல் நடிகை ரவீனா தாஹாவிற்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக மீடியாவிற்குள் நுழைந்தார். பின் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘ஜில்லா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதற்குப்பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இதற்கிடையே இவர் சின்னத்திரை சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ என்ற சீரியல் தான் இவர் நடித்த முதல் சீரியல். இதற்குப் பின் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ‘மௌன ராகம் 2’ சீரியலில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இவர் சீரியல்களில் மட்டும் இல்லாமல் நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார். இவர் முதன் முதலில், ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி சீசன் 4’ ஷோவிலும் கோமாளியாக பங்கேற்று இருந்தார்.
ரவீனா குறித்த தகவல்:
அதைத்தொடர்ந்து, ‘பிக் பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி 91 வது நாள் வெளியேறி இருந்தார். பின், ‘ஜோடி ஆர் யூ ரெடி’ நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று இரண்டாம் பரிசு வென்றிருந்தார். இதை அடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி சீரியலில் ரவீனா கமிட்டாகி இருந்தார். மேலும், சீரியல் ஒளிபரப்பாகும் முன்பே ரவீனா விலகி இருந்த செய்தி வைரலாகி இருந்தது. இதை அடுத்து ரவீனா, எந்த ஒரு சின்னத்திரை சீரியல், நிகழ்ச்சிகளில் எந்த கொள்ள கூடாது என்று ரெட் கார்டு போடப்பட்டு இருந்ததாக சில தினங்களாக தகவல் வெளியாகி இருந்தது.
ரவீனா குறித்த சர்ச்சை:
இதற்கு காரணம், இவர் சிந்து பைரவி சீரியல் ப்ரோமோ வெளியில் வந்த பிறகு திடீர் என விலகியது தான் என்று கூறப்படுகிறது. முதலில் முக்கிய கதாபாத்திரம் என்று சொல்லி பின் இரண்டு ஹீரோயின்கள் கதை என்று சொன்னதால் தான் ரவீனா வெளியேறிவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து ரவீனா எந்த ஒரு விளக்கமுமே கொடுக்காமல் இருந்தார். பின் சீரியல் தயாரிப்பாளர்கள், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் ரவீனா மீது அப்போதே புகார் கொடுத்து இருந்தார்கள். அதில், இனி வேறு எந்த சீரியல், நிகழ்ச்சியில் ரவீனா பங்கேற்க கூடாது என்றெல்லாம் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது. அதற்கேற்ப ரவீனாவும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலுமே, சீரியல்களிலுமே தலை காட்டாமல் இருந்தார். பின் சமீபத்தில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ரவீனா கலந்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=b-EeJl0YkKM
ரவீனா பேட்டி:
பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ரவீனா, என் மீது அளித்த கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், ரெட் கார்ட் கொடுக்கப்படவில்லை. அதோடு இந்த விவகாரம் சுமூகமாக முடிந்துவிட்டது என்று கூறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ரவீனாவிற்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தகவலும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரவீனா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர்கள் அளித்த பேட்டியில், ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சங்கம், டிவி நடிகர் சங்கத்திடம் எதுவுமே கலந்து ஆலோசிக்காமல் தடை போட்டிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=52VhLevLgM4
மீண்டும் ரெட் கார்ட் தடை:
அதனால் அந்த உத்தரவை சில சேனல்கள் தரப்பு கண்டு கொள்ளவில்லை. அதற்குப்பின் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முறைப்படி நடிகர் சங்கத்தில் கடிதம் எழுதியிருந்தார்கள். அதற்கு பின் தான் சங்கத்திலிருந்து ரவீனாவையும் கூப்பிட்டு பேசி இருந்தார்கள். கமிட் ஆன பிறகு சீரியலில் இருந்து விலகியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரவீனாவிற்கு ஓராண்டு தடை விதிக்க உத்தரவு போட்டிருக்கிறார்கள். தயாரிப்பு தரப்பில் ரெண்டு வருஷம் கேட்டார்கள். ஆனால், ஒரு வருஷம் தடை போடப்பட்டிருக்கிறது. இதற்கு ரவீனா தரப்பிலிருந்து தன்னுடைய செயலுக்கு வருத்தம் கேட்டு மன்னிப்பு கடிதம் ஏதாவது தந்தால் மட்டும் தான் மேற்கொண்டு இந்த விஷயத்தில் அடுத்து என்ன என்று தெரியும் என்று கூறியிருக்கிறார்கள்.