என் முகம், உயரத்தை வைத்து கதை வேண்டும், ஆனால் - நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஓபன் டாக்

By subhashini · 18/9/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. இவர் 1998ல் நடன கலைஞராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்திலும் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார்.

மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது. இதன் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். இந்த படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இவரின் நகைச்சுவைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடைசியாக ரெடின் கிங்ஸ்லி அவர்கள் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியிருந்த ஸ்வீட் ஹார்ட் படத்தில் நடித்திருந்தார்.

ரெடின் கிங்ஸ்லி திரைப்பயணம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நிவின்பாலி நடிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்திலும் கமிட் ஆகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே யோகி பாபுவை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லியும் ஹீரோவாக களமிறங்குகிறார் என்று தகவல் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ரெடின் கிங்ஸ்லி பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ரெடின் கிங்ஸ்லி, இயக்குனர் நெல்சனை எனக்கு கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே தெரியும். அப்போது நான் நடன பள்ளி வைத்திருந்தேன். அவருடைய கல்லூரி கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடனம் கற்றுக் கொள்ள அவர் என்னிடம் வந்தார். அவருக்காக நான் தான் நடன பயிற்சி அளித்தேன். அதில் அவர் முதல் பரிசையும் பெற்றார். அப்போதிலிருந்து நாங்கள் தொடர்ந்து நண்பர்களாக இருக்கிறோம். கோலமாவு கோகிலா படத்திற்கு முன்பு சிம்புவை வைத்து நெல்சன் வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார்.

ஹீரோ வாய்ப்பு:

பல காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது. அந்த படத்தில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தார். என் நேரமோ என்னவோ தெரியவில்லை அந்த படம் வெளியாகவே இல்லை. அதற்கு பிறகு தான் கோலமாவு கோகிலா பட வாய்ப்பு நெல்சன் எனக்கு தந்தார். இப்போது நன்றாக தான் சென்று கொண்டிருக்கின்றது. என்னுடைய உயரம் எனக்கு தெரியும். நான் ஹீரோ மெட்டீரியலும் இல்லை என்பதும் எனக்கு தெரியும். ஆனால், இந்த முகத்தை இந்த உயரத்தை வைத்து எழுதும் கதையில் நாயகனாக வேண்டுமென்றால் நான் நடிக்க தயார் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full