'நெல்சன் வெறில இருக்காரு, அந்த படம் இப்படி தான் இருக்க போது' - தலைவர் 169 படம் குறித்து கிங்ஸ்லீ அளித்த பேட்டி.

By Ajju · 15/6/2022

பீஸ்ட் படத்தின் விமர்சனங்களால் துவண்டு கிடக்கும் நெல்சன் தற்போது தலைவர் 169 படத்திற்காக வெறித்தனமாக இருப்பதாக கூறியுள்ளார் ரெட்டின் கிங்ஸ்லீ. சமீபத்தில் வெளியாகி இருக்கும் லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் நெல்சனை கலாய்த்து வருகின்றனர்.நெல்சன் இறுதியாக இயக்கிய பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால் அவரை பலரும் கலாய்த்து தள்ளினர். இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் நெல்சனை கலாய்த்து பல விதமான மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய அணைத்து படங்களும் வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து இருக்கிறது. இதனால் லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜை பாராட்டி வருவதை விட பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை குறிப்பிட்டு தான் பல மீம்கள் வந்து கொண்டு இருக்கிறது.

விக்ரம் படம் ஓடியதற்கு நெல்சனை கலாய்க்க முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் விஜய்யின் தீவிர ரசிகர். பீஸ்ட் படம் எடுப்பதற்கு முன்னாள் அவர் கண்டிப்பா ஒரு Fan Boy சம்பவத்தை செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், லோகேஷ் கனகராஜும் கமலின் தீவிர ரசிகர் தான். எனவே, அவரும் கமலை வைத்து ஒரு தரமான Fan boy சம்பவத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை நிறைவேற்றி இருக்கிறார் லோகேஷ்.

https://twitter.com/StatusMiracle/status/1535249683710640128

இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் நெல்சனை திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கு பின்னர் விருது விழா ஒன்றில் பங்கேற்ற நெல்சனை, மேடையில் ஆடும்படி பூஜா ஹேக்டே கூறி இருந்தார். அதற்கு நெல்சன் 'அவங்கள இப்படி மாட்டிவிட்டா என்ன இப்படி மாட்டி விட்ருவாங்க' என்று சொல்ல மேடையில் இருந்த பிரியங்கா 'நீங்க யார்னா மாட்டிவிடுங்க' என்று சொன்னார். அதற்கு நெல்சன் 'ஏற்கனவே நான் நல்லா மாட்டி இருக்கேன், நான் பேசமா கீழ போய் ஒக்காந்துக்குறேன்' என்று பேசியுள்ளார்.

https://twitter.com/rajini_tamil/status/1536742821989781504

இப்படி ஒரு நிலையில் தற்போது நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருக்கிறார். இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என்று பார்க்கப்படுகிறது. அதே போல பீஸ்ட்டில் நெல்சன் சறுக்கியதால் ரஜினி படத்தின் திரைக்கதையை கவனிக்கும் பொறுப்பு பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கு  அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.youtube.com/watch?v=fd-_hWRbLts&feature=emb_title

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகரும் நெல்சனின் நண்பருமான ரெடின் கிங்ஸ்லீ ‘ரஜினி படத்தின் கதை தொடர்பாக டிஸ்கஷன் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாதியை நெல்சன் எழுதிக் கொண்டிருக்கிறார். அவரது கவனம் முழுவதும் திரைக்கதையை எழுதுவதில் இருக்கிறது. அது 100 சதவீதம் நெல்சன் படமா தான் இருக்கும். நெல்சன் வெறியில் இருக்கிறார். கண்டிப்பாக ரஜினி படத்தில் அடிச்சு தூக்குவாரு’ என்று கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது பீஸ்ட்டில் விட்டதை ரஜினி படத்தில் நெல்சன் நிச்சயம் பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full