திருமணமாகி ஓராண்டு கழித்து ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா சொன்ன குட் நியூஸ், என்ன தெரியுமா?

By subhashini · 3/12/2024

திருமணத்திற்குப் பிறகு ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் 1998ல் நடன கலைனராக அறிமுகமானார். அதன் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்திலும் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார். மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது. இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

ரெடின் கிங்ஸ்லி திரைப்பயணம்:

மேலும், இவரின் நகைச்சுவைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதை அடுத்து ரெடின் கிங்ஸ்லி பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதற்கிடையில் மாஸ்டர் பட நடிகையை திடீர் திருமணம் முடித்தார். அவர் வேற யாரும் இல்லை சங்கீதா தான். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான் சங்கீதா. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும் ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் சங்கீதா.

சங்கீதா திரைப்பயணம்:

இந்த படத்தில் இவர் சில நிமிடம் நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு திருமணம் மைசூரில் உள்ள ஒரு படப்பிடிப்பில் நடந்தது. இந்த திடீர் திருமணத்தில் படகுழுவினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்.

ரெடின் கிங்ஸ்லி திருமணம்:

ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர், சங்கீதா இந்து என்பதால் இரு முறைப்படி திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதோடு இவர்களின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இணையத்தில் வந்தது. இருந்தாலும் அதை இருவரும் கண்டுகொள்ளவே இல்லை. தற்போது இருவருமே தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கிங்ஸிலியின் மனைவி சங்கீதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

சங்கீதா கர்ப்பம்:

இதை இவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் சங்கீதா தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானது தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full