ஈரோடு கிழக்கு தேர்தல் - ரீல் கேப்டனை டீ ஆத்தவிட்டு வாக்கு சேகரித்த தே.மு.தி.க - வைரலாகும் வீடியோ

By Manikandan · 21/2/2023

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், ரஜினி, கமல், சரத்குமார், பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த். மேலும் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த ஒரே நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

விஜயகாந்த் திரைப்பயணம்:

மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இவர் சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார். கொரோனவின் போது கூட பல ஏழை மக்களுக்கு உணவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் நலக்குறைவு :

மேலும் சினிமா திரையில் அனைவருக்கும் நல்ல உணவு வழங்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்முறை படுத்தியவர் விஜயகாந்த் தான். அதனால் தான் இவரை புரட்சி கலைஞர் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால், இவர் மக்களுக்கு உதவிய சமயத்தில் பெரிதாக ஊடகங்கள் இல்லாததனால் இவர் செய்த உதவிகள் எதுவும் வெளியே தெரியவில்லை. தற்போது இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது இவருடைய கட்சியை இவரது குடும்பம் தான் கவனித்து வருகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் :

இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக, அமமுக போன்ற கட்சிகள் போட்டியிடாமல் விலகிய நிலையில் தேமுதிக துணிந்து களமிறங்கியுள்ளது. மேலும் தேமுதிக வேட்பாளராக ஆனந்த் என்பவரை களமிறக்கியுள்ளது. இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் விஜயகாந்தின் மனைவி, அவரது மகன் போன்றவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

வாக்குகள் சேகரித்த ரீல் விஜயகாந்த் :

இந்நிலையில் விஜயகாந்த் போல உருவத்தில் அப்படியே இருக்கும் ரீல் கேப்டனை தேர்தல் களத்தில் களமிறக்கி நூதன முறையில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அதாவது ரீல் விஜயகாந்த் ஒரு ரோட்டு டீக்கடையில் டீ ஆத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு வாக்குகளை சேகரித்தார். மேலும் அவர் கூறுகையில் நான் விஜயகாந்த் போலவே இருப்பதினால் எனக்கு அதிக மரியாதை மக்கள் மத்தியில் கிடைக்கிறது. ஏனென்றால் மக்கள் கேப்டன் மீது அவ்வளவு பாசமாக இருக்கின்றனர். எம்ஜிஆருக்கு பிறகு கேப்டன் தான் அதில் எந்த சந்தேகமும் கிடையாது, ஆட்சியை கண்டிப்பாக நாங்கள் கைப்பற்றுவோம் என்று கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full