நடிகை மாளவிகாவுடன் இருக்கும் ரீமா சென்.! என்ன இப்படி மாறிட்டாங்க.!
தமிழில் விஷால் அறிமுகமான 'செல்லமே ' படத்தில் அறிமுகமானவர் நடிகை ரீமா சென், 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த ரீமா சென் மும்பையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின்னர் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார் ரீமா சென்.
https://www.instagram.com/p/Bx9ptJCH_ev/
அதன்பின்னர், 2001ஆம் ஆண்டு மாதவனுக்கு ஜோடியாக மின்னலே படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு ரீமா சென்னுக்கு சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. அதன்பின்னர் பகவதி, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்தார்.
ரீமா சென் தமிழில் நடித்த கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே ஹிட் படங்கள் தான். கடைசியாக 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து வந்தார்.
இறுதியாக விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். சமீபத்தில் இவர், மளவிகாவுடன் இருக்கும் புகைப்படம் பதிவிட்டிருந்தார். அதில் அடையாளம் தெரியாத அளவிற்கு படு குண்டாக மாறியுள்ளார்.