அப்போது ஆணவத்தில் இருந்தார்கள், இப்போ நிலைமை - பாலிவுட் நடிகர்கள் பற்றி ரெஜினா சொன்ன விஷயம்

By subhashini · 1/2/2025

பாலிவுட்-தென்னிந்திய சினிமா குறித்து நடிகை ரெஜினா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரெஜினா. இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின்னர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.

பின் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் இவர் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார்.

ரெஜினா குறித்த தகவல்:

இவர் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் அஜித் நடிக்கும் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன்,ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார்.

விடாமுயற்சி படம்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் சிங்களான ‘சவதீகா’ பாடல் படத்தின் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. அறிவு எழுதி இருக்கும் இப்பாடலை பாடகர் ஆண்டனிதாசன் பாடியிருந்தார். இந்தப் பாடல் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டதாகும். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. தற்போது இப்படம் வருகின்ற பிப்ரவரி 6 ஆம் இப்படம் வெளியாகயுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

ரெஜினா பேட்டி:

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ரெஜினா, சமீப காலமாகவே பாலிவுட் சினிமாக்களில் தென்னிந்திய நடிகர்கள் அதிகமாக நடித்துக் கொண்டு வருகிறார்கள். அதே போல் பாலிவுட் பிரபலங்களின் ரசனையும் தென்னிந்திய சினிமாக்களின் மீது தான் அதிகமாக இருக்கிறது. இந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது பாலிவுட்டுக்கு வேறு வழி இல்லை. முன்பெல்லாம் பாலிவுட் ரொம்பவே ஆணவ மனப்பான்மையுடன் இருந்தார்கள். காரணம், தென்னிந்திய நடிகர் நடிகை என்றாலே அவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருக்கும்.

பாலிவுட் சினிமா பற்றி சொன்னது:

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அதனால் நான் ஒரு தென்னிந்திய நடிகை போல் அவர்களுக்கு தெரியவே இல்லை. பாலிவுட்டுக்கு தென்னிந்திய நடிகர்களின் தேவை அதிகரித்து இருக்கிறது. பேன்டமிக் காதலுக்கு பிறகு பாலிவுட் ரசிகர்களும் தென்னிந்திய பிரபலங்களை வெகுவாக ரசிக்க ஆரம்பித்துள்ளதால் அங்கு நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் தான் தென்னிந்திய பிரபலங்களும் பாலிவுட்டை சென்று அடைகிறார்கள். இரு திரவங்கள் கலப்பது போல இரு வெவ்வேறு துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் இப்படித்தான் இணைந்து கொண்டிருக்கிறார்கள். பாலிவுட்டுக்கு இப்போது வேறு வழியில்லை. அந்த ட்ரெண்டிங் உருவாகும் பரிமாணம் அடைந்து வருகிறது என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full