பட வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் - செல்வராகவன் பட நடிகை தெரிவிக்கும் பகீர் உண்மைகள்

By Arun · 19/8/2023

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார்கள் என்று நடிகை ரெஜினா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே பெண்கள் பல இடங்களில் பாலியல் ரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக பிரச்சனைகள் அதிகம் வருகிறது. இந்தியா முழுவதும் இந்த மீ டு விவகாரம் தான் தலை விரித்து ஆடி கொண்டு இருக்கிறது.

அதிலும் தமிழகத்தில் இந்த பிரச்சனை தலை தூக்கி இருக்கிறது. சமீப காலமாகவே பலர் தங்களுக்கு நடந்த இந்த பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனால், யார் என்பதை தான் அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை. அதில் சில பிரபலங்கள் சிக்கியும் இருக்கிறார்கள். இருந்தாலும், இந்த பிரச்சனை ஒழிந்த பாடு இல்லை. இந்த நிலையில் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்சனை குறித்து நடிகை ரெஜினா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ரெஜினா அவர்கள் பேட்டியில், ஒருமுறை பட வாய்ப்புக்காக ஒருவரிடம் பேசி இருந்தேன். அவர் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு தயாராக இருந்தால் உடனே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார். எனக்கு அப்போது அர்த்தம் தெரியவில்லை. அவர் என்னுடைய சம்பளம் விவரம் குறித்து பேசுகிறார் என்று நினைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு இதை நான் என்னுடைய மேனேஜரிடம் பேசிய பிறகு தான் எனக்கு அர்த்தம் புரிந்தது.

இந்த சம்பவம் நடந்த போது எனக்கு 20 வயது தான் என்று கூறி இருக்கிறார். இப்படி ரெஜினா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ரெஜினாவிற்கு ஆதரவாகவும், உங்களிடம் அப்படி கேட்ட நபர் யார்? என்று கேட்டு வருகிறார்கள். தென்னிந்திய சிணிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக ரெஜினா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த ‘கண்ட நாள் முதல்’ படத்தில் தனது 15 வயதில் அறிமுகம் ஆனார் ரெஜினா கேசான்ரா.

அதன் பின்னர் இவர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் பிரபலம் ஆனார் ரெஜினா. இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ராஜதந்திரம், மாநகரம், சரவணன்இருக்கபயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியில் கூட நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் தெலுங்கில் ஆச்சார்யா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார்.
தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி , சிம்புதேவன் இயக்கி வரும் கசட தபர போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full