என்னுடைய அம்மாவே கேட்கவில்லை - திருமணம் பற்றிய கேள்விக்கு நடிகை ரெஜினா சொன்ன பதில்

By subhashini · 7/2/2025

தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை ரெஜினா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரெஜினா. இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின்னர் இவர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.

அதன் பின் இவர் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார். இதை தொடர்ந்து இவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரெஜினா குறித்த தகவல்:

இருப்பினும் இவர் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் அஜித் நடிக்கும் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

விடாமுயற்சி படம்:

இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. நேற்று அனைவரும் எதிர்பார்த்த அஜித்தின் விடாமுயற்சி படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் வில்லனாக வரும் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு மனைவியாக ரெஜினா நடித்திருக்கிறார். குறிப்பாக, இந்த படத்தில் அஜித்தின் மனைவி திரிஷாவை கடத்த சொன்னது யார் தொடர்பான சீக்ரெட்டை ரெஜினா சொல்லும் சீன்கள் எல்லாம் பயங்கர மாஸாக இருக்கிறது. சொல்லப்போனால், ரெஜினாவின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தற்போது ரெஜினாவுக்கு 34 வயதாகிறது. இன்னும் இவருக்கு திருமணம் நடக்கவில்லை. இது தொடர்பாக பல கேள்விகள் எழுந்து இருக்கிறது.

https://www.youtube.com/shorts/w-BX4aJv3Ns

ரெஜினா பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ரெஜினா, எப்போ கல்யாணம் பண்ண போற என்று என்னுடைய அம்மாவே கேட்கவே மாட்டாங்க. அப்படி இருக்கும்போது அந்த கேள்வியை யார் கேட்டாலும், என்னுடைய அம்மாவே அந்த கேள்வியை கேட்க மாட்டார்கள். நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு விடுவேன். யாருடனும் நான் உறவில் இருப்பது அவர்களுக்கு தான் ரொம்ப கஷ்டமே. ஆனால், ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தான் ஈசியாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full