Maggiயும் ஆம்பளைங்களும் ஒன்னு - ரெஜினாவின் டபுள் மீனிங் ஜோக் - நெட்டிசன்கள் ரியாக்ஷன் .

By Rajkumar · 10/9/2022

தென்னிந்தியா சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரெஜினா. இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின்னர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். பின் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். அதே போல தெலுங்கில் பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கும் நடனமாடி வருகிறார் ரெஜினா. சமீபத்தில் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் ரெஜினா.

இறுதியாக ரெஜினா, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து கசட தபர, மகிழ், தலைவி போன்ற படங்களில் நடித்து இருந்தார் ரெஜினா. தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரெஜினா ஷாகினி டாகினி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

https://twitter.com/poochandiii/status/1567882665487138818

இந்த படத்தில் ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது இந்த திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதற்காக தீவிரமாக புரமோஷன் பணிகளில் வழக்கு ஈடுபட்டு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் இருவரும் இந்த படம் குறித்து தெலுங்கில் பேட்டி ஒன்றை பங்கேற்று இருந்தனர்.

https://twitter.com/pranav10__/status/1568180227536482306

அந்த பேட்டியில் இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் ரெஜினா நான் ஒரு அடல்ட் ஜோக்கை சொல்கிறேன் ஆண்களும் மேகியும் ஒன்று. இரண்டுமே இரண்டு நிமிடத்தில் முடிந்து விடும் என்று இரட்டை அர்த்தத்தில் ஜோக் ஒன்றைகூறி இருந்தார். இந்த ஜோக்கைக் கேட்ட ஆங்கர் அதை புரிந்து கொள்ள சற்று நேரம் எடுத்து கொண்டதால் இது அடல்ட் ஜோக், உங்களுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை என்று கூறினார்.

மேலும்,அருகில் இருந்து நிவேதிய தாமஸ் இந்த ஜோக் புரியாதது போலவே அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்,இந்த வீடியோ எப்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரெஜினாவைபலரும் பலவிதமான மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full