மிஷ்டி டோய் வேண்டும்ன்னு அலைந்து திரிந்தேன், ஆனால் - நடிகை ரெஜினா ஓபன் டாக்

By subhashini · 21/10/2025

சந்தர்ப்ப சூழ்நிலைக்காக பொய் சொன்னதாக நடிகை ரெஜினா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரெஜினா. இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின்னர் இவர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.

அதன் பின் இவர் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார். அதை அதை தொடர்ந்து இவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரெஜினா குறித்த தகவல்:

இருப்பினும் இவர் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் தமிழில் அஜித் நடித்த இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. மேலும், இந்த படத்தில் வில்லனாக வரும் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு மனைவியாக ரெஜினா நடித்திருக்கிறார். ரெஜினா சீன்கள் எல்லாம் பயங்கர மாஸாக இருந்தது. சொல்லப்போனால், ரெஜினாவின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் முக்கியமானதாக இருந்தது.

ரெஜினா பேட்டி:

அதோடு இவர் சமீப காலமாக பல படங்களில் ஐட்டம் பாடல்களிலும் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சந்தர்ப்பம் காரணமாக சொன்ன பொய் பற்றி சொன்னது,
10 வருடங்களுக்கு முன்பு நான் பெங்களூரில் என்னுடைய தோழிகளுடன் ஓர் இரவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மிஷ்டி டோய் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

பொய் சொன்ன காரணம்:

நிறைய கடைகளுக்கு போனேன். ஆனால், அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. கடைசியில் ஒரு கடையை பார்த்தேன். ஆனால், அதை மூட போனார்கள். கடைக்காரர், மிஷ்டி டோய் இல்லை ஒன்றுமில்லை. போய்விடு என்றெல்லாம் திட்டினார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. உடனே நான் கர்ப்பமாக இருக்கிறேன் தயவு செய்து அதை கொடுங்கள். எனக்கு அது வேண்டும் என்று சொன்னேன் என்றார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full