அது நடக்காமல் இருந்திருந்தால் தனுஷை திருமணம் செய்திருப்பேன் - சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன் பட நடிகை.

By subhashini · 23/10/2023

அதுமட்டுமில்லை என்றால் தனுசை நான் திருமணம் செய்திருப்பேன் என்று ரேகா நாயர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர இடங்களில் நடித்து வருபவர் ரேகா நாயர். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பல வருடங்களாக ரேகா நாயர் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும், அவருடைய கதாநாயகி ஆசை நிறைவேறவில்லை.

பின் கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாண காட்சியில் ரேகா நாயர் நடித்திருந்தார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

ரேகா நாயர் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் அரை நிர்வாண காட்சியில் ரேகா நாயர் நடித்திருந்தார். இது குறித்து பலரும் சர்ச்சையாக பேசி இருந்தார்கள். குறிப்பாக, பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயரை விமர்சித்து பேசிந்தார். இதனால் ரேகாவுக்கும் ரங்கநாதனுக்கும் இடையே மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது. இது எல்லாம் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு சமீப காலமாக இவர் நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

தனுஷ் குறித்து சொன்னது:

அதிலும் இவர் சமூக கருத்திற்கு குரல் கொடுக்கிறேன் என்று ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரேகா நாயர் தனுஷ் குறித்து கூறியிருந்தது, தமிழ் சினிமாவில் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் தனுஷ். அவர் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் நானே திருமணம் செய்து இருப்பேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கூட தனுஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் நான், எனக்கு அவரை பிடிக்கும் என்று சொன்னேன். இதை நான் அவரிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதனால் அவர் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார் என்று கூறி இருக்கிறார்.

தனுஷ் திரைப்பயணம்:

தனுஷ் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனுஷ் விவாகரத்து:

இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தங்களின் 18 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பேசிக் கொண்டிருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தனுஷ் குறித்து ரேகா நாயர் அளித்து இருக்கும் பேட்டி தான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full