பெண்களால் தான் ஆண்கள் கொடுமையை அனுபவிக்கிறார்கள் - நடிகை ரேகா நாயர் பகீர் தகவல்

By subhashini · 28/1/2025

ஆண்களுக்கு ஆதரவாக நடிகை ரேகா நாயர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பல நடிகைகள் திரைத்துறையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசுவார்கள். அந்த வகையில் ஓபனாக பேசும் நடிகை தான் ரேகா நாயர். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ரேகா நாயர்.

இவர் தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வந்தும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கிடைக்கும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே ரேகா நாயர் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் இரவின் நிழல் படம் வந்தது.

ரேகா நாயர் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கும் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியான படம் தான் இரவின் நிழல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக ரேகா நடித்திருப்பார். இது பெரிய சர்ச்சையாக மாறியிருந்தது. குறிப்பாக திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக பேசய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

ரேகா நாயர் சர்ச்சை:

அதற்கு பின் இருவருக்கும் வாக்குவாதம் நடந்து இருந்தது. அது பெரிய அளவில் சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. இதை அடுத்து சோசியல் மீடியாவில் ரேகா பல பேட்டிகளில் தன்னை குறித்து வெளிப்படையாக கூடியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரேகா நாயர், ஆண்கள் ரொம்பவே பாவம். இப்போது காலமே மாறிவிட்டது. பெண்கள் தான் இப்போது எல்லாம் ஆண்களை கொடுமைப்படுத்துகிறார்கள்.

ரேகா நாயர் பேட்டி:

பெண்கள் சொல்வதை தான் எங்குமே கேட்கிறார்கள். காவல் நிலையத்தில் ஆணுக்கு எதிராக புகார் கொடுத்தாலே உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். உண்மையை மட்டும் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆண்களுக்கான குறையை யாருமே கேட்க மாட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் கோர்ட்டுக்கு சென்று விட்டால் அங்கேயுமே பெண்களுக்கு தான் சாதகமாக பேசுவார்கள்.

View this post on Instagram

A post shared by Cinema Bioscope (@cinemabioscope1895)

பெண்கள்-ஆண்கள் பற்றி சொன்னது:

பெண்கள் யார் கூட வேண்டுமானாலும் வெளியில் சுற்றலாம். சினிமா, பார்க், பீச் என்றெல்லாம் இருக்கலாம் என்று பெண்களுக்கு எதிராக பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும்,சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சிலர், இன்னும் ஆண்களால் பல பெண்கள் கொடுமைகளை அனுபவித்து தான் வருகிறார்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full