ரெட்ரோ வெற்றி : வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் , நிராகரித்த சூர்யா - நடந்தது என்ன?

By subhashini · 10/5/2025

ரெட்ரோ படத்தினுடைய வெற்றி விழாவில் சூர்யா செய்திருக்கும் செயல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

ரெட்ரோ படம்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுவரை இந்த படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக படகுழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர் எல்லோருமே கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்கள். அதோடு ரெட்ரோ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் அகரம் பவுண்டேசனுக்கு 10 கோடி ரூபாயை சூர்யா கொடுத்திருக்கிறார்.

படத்தின் வெற்றி விழா:

பின் இது தொடர்பாக சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு பலரும் சூர்யாவின் செயலை பாராட்டி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சூர்யாவிற்கு படத்தினுடைய விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைர மோதிரத்தை பரிசளித்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சக்தி வேலன், ரெட்ரோ படத்தை தமிழக முழுவதும் வெளியிட வாய்ப்பு அளித்த 2d நிறுவனத்திற்கும் சூர்யா அண்ணன் மற்றும் ராஜசேகர பாண்டியன் அண்ணன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விநியோகஸ்தர் செய்தது:

இந்த வருடத்தில் வெளிவந்த படங்களிலேயே ரெட்ரோ படம் தான் அதிக லாபம் தந்த படம் என்பது சொல்வதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் உருவான காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்கள் ஆன இயக்குனர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கும் வைர மோதிரங்களை பரிசாக கொடுத்தோம். சூர்யா அண்ணாவிற்கும் வைர மோதிரத்தை கொடுத்தோம். ஆனால், அவர் உடனடியாக மீண்டும் எனக்கே அதை திருப்பி போட்டு விட்டார்.

சூர்யா செய்த செயல்:

தன்னுடைய அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார். இது என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப மகிழ்வான தருணமாக பார்க்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு முதன்முறை நடக்கவில்லை. இதற்கு முன்பே கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் தங்க செயின் மற்றும் விருமன் படத்தினுடைய வெற்றி விழாவில் பிரேஸ்லெட்டை பரிசாக கொடுத்தேன். அப்போதும் சூர்யா அண்ணா, எனக்கே தான் திருப்பிக் கொடுத்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full