தன் பட டைட்டிலை வைத்ததால் ரஜினிக்கு ஏற்பட்ட கோபம் ? சிவாஜி பட வாய்ப்பை சத்யராஜ் மறுக்க காரணம் என்ன ?

By Ajju · 22/6/2022

ரஜினிகாந்துக்கும், சத்யராஜூக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கோலிவுட் திரையுலகில் வந்த வதந்திக்கு நடிகர் சிபிராஜ் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை பாலிவுட்டை போல பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். விஜய் துவங்கி, சாந்தனு வரை தமிழ் சினிமாவில் ஏராளமான வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் விஜய், சூர்யா, கார்த்தி என்று ஒரு சிலர் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து இருக்கின்றனர்.

அந்த வகையில் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் வரிசையில் சிபி ராஜும் ஒருவர். கோவை மாவட்டத்தில் பிறந்து ,எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகராக இருந்து தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் சத்யராஜ். இவரது மகன் தான் சிபிராஜ். இவர் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், எந்த படமும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

சிபிராஜ் குறித்த தகவல்:

இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான லீ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் சத்தியராஜ் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார். மேலும், நடிகர் சிபிராஜ் அவரது தந்தை சத்யராஜுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். ஆனாலும், இவர் நடித்த பெருமபாலான படங்கள் தோல்வியடைந்து. இவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மாயோன் திரைப்படம்:

இதனால் இவர் தன் தந்தையை போல் சினிமாவில் பிரபலமாகவில்லை. மேலும், சிபிராஜ் தன்னுடைய விடா முயற்சியினால் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சிபிராஜ் அவர்கள் மாயோன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் 24 ஆம் தேதி திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரோமோஷன் செய்யப்படுகிறது.

சிபிராஜ் அளித்த பேட்டி:

இதனால் இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகமொன்றிற்கு சிபிராஜ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் ரஜினிக்கும், சத்யராஜுக்கும் என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு சிபிராஜ் கூறியிருந்தது, இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சமூக வலைத்தளங்களில் தான் இப்படி ஒரு வதந்தி பரவி வருகிறது. ரஜினியின் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க அப்பாவிடம் அணுகிய இருந்தார்கள்.

ரஜினி-சத்யராஜ் ப்ரச்சனை குறித்து சொன்னது:

அவர் அப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்ததால் அந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றார்.
மற்றபடி ரஜினிக்கும் அப்பாவுக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. ரஜினி நடித்த ரங்கா திரைப்படத்தின் டைட்டில் தனது படத்தின் டைட்டிலாக வைத்தது தான் ரஜினி கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுவது முழுக்க முழுக்க பொய் என்று கூறியிருக்கிறார். இப்படி சிபிராஜ் அளித்ததன் மூலம் கோலிவுட் திரையுலகில் நீண்ட நாட்களாக பரவிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full