செட்டில் படு கோபமடைந்த ரியோ.! கடைசில இவரையே கோப படுத்திட்டாங்களே.!

By ·

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரியோ ராஜ். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமாக உள்ளார்.

https://www.facebook.com/VijayTelevision/videos/vb.211311612281410/1343082549167075/?type=2&theater

தனது வித்யாசமான, தனித்துவமான ஆங்கரிங் திறன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ரியோ, குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் அதிகம் கவனிக்க படுபவராக வளம் வருகிறார். விரைவில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக உள்ள இவர், தற்போது விஜய் டிவியில் ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் 2 பெண்களிடையே போட்டி நடத்தப்பட்டது. குறிப்பிட்ட டாஸ்க் தன்னால் செய்ய முடியாது என ஒரு போட்டியாளர் கூற பின்னர் இருவரும் சண்டையிட்டு கொண்டனர். அதன் பின்னர் அந்த பெண் ரியோவுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார்.

இதனால் டென்ஷனனான ரியோ ‘ யார் டா கோ-ஆர்டினேட்டர் ? என்ன டா இவர்களிடம் திட்டுவாங்க தான் சம்பளம் கொடுக்குறீங்களா? என மிகவும் கோபமாக கத்தும் காட்சி ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. ஆனால்,இது உண்மையான சண்டை தானா அல்லது வழக்கம் போல டிஆர்பி -காகத்தானா என்ற ஒரு எண்ணமும் தோன்றுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full