பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் கண்ணீருடன் ரியா வெளியிட்ட முதல் வீடியோ- என்ன சொல்லி இருக்காரு பாருங்க
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் ரியா தியாகராஜன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஆறு வாரம் முடிந்து 43 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆவார். பின் கடந்து வந்த பாதை டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்கள்.
நாமினேஷன் பட்டியல்:
மேலும், கடந்த ஆறாவது வாரம் நடந்த கேப்டன்சி டாஸ்கில் அருண் பிரசாத் வென்று தலைவராகி இருந்தார். இந்த வாரம் பள்ளி டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் மாணவர்கள் மாறி கலாட்டா, கலவரங்கள் செய்திருந்தார்கள். மேலும், கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் தீபக், சௌந்தர்யா, சிவக்குமார், ராணவ், ரஞ்சித், சத்யா, ஜெப்ரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சரி, சத்யா, ரியா, சாச்சனா ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருந்தார்கள். இதில் குறைவான வாக்குகளை பெற்று நேற்று ரியா தியாகராஜன் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.
ரியா தியாகராஜன் குறித்த தகவல்:
இதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ரொம்ப எமோஷனலாக கண்ணீர் விட்டு அழுது பேசியிருந்தார். விஜய் சேதுபதியும் அவருக்கு ஆறுதல் சொல்லி வழி அனுப்பியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியப் பிறகு ரியா ரொம்ப எமோஷனலாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் இந்த விஷயத்தால் ரொம்ப டவுன் ஆகி இருக்கிறேன். இந்த வாய்ப்பு கிடைத்த போது எல்லாருமே பிடிஆர் செட் பண்ணி வச்சுட்டு போலாம் என்று சொன்னாங்க. ஸ்டேட்டஜி எல்லாம் பண்ணு என்று சொன்னார்கள். ஆனால், நான் எதுவுமே பண்ணவில்லை.
ரியா தியாகராஜன் வீடியோ:
நான் செய்யும் சின்ன விஷயம் மக்களுக்கு பிடித்த போய் அதன் மூலம் எனக்கு கிடைக்கும் சப்போர்ட் போதும் என்று நினைத்தேன். நான் உள்ளே சென்று தப்பு என்று தோன்றியதை தட்டி கேட்டு நின்று இருக்கிறேன். இந்த விஷயம் உங்களுக்கு எந்த அளவுக்கு ரீச் ஆகி இருக்குமோ? என்று தெரியவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் ஏன் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்ற கேள்வி எனக்குள் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு வேலை நான் பிரபலம் என்பதால் எனக்கு நீங்கள் சப்போர்ட் பண்ணவில்லையா? என்னை மாதிரி ஆட்கள் உள்ள வரக்கூடாதா? எனக்கு ஏன் சப்போர்ட் பண்ணவில்லை? என்ற பல கேள்விகள் என் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதைத் தாண்டி எனக்கு நிறைய பேர் சப்போர்ட் செய்து இருக்கிறீர்கள். அவர்களுக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.